நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும் (Ninaithale Inikkum) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயபிரதா, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தெலுங்கில் 'அந்தமானிய அனுபவம்' எனும் பெயரில் 1979 ஏப்ரல் 19இல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூர் நாட்டில் படமாக்கப்பட்டது.[2] நடிகர்கள்
பாடல்கள்இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். "எங்கேயும் எப்போதும்" என்ற பாடல் "கத்தாழ காட்டுக்குள்ளே விறகொடிக்கப் போனாளாம்" என்ற நாட்டுப்புற பாடலின் மெட்டில் மேற்கத்திய விடிவில் அமைத்ததாக விஸ்வநாதன் ஓர் நேர்காணலில் கூறினார்.[3] "சம்போ சிவசம்போ" என்ற பாடல், மலபாரில் பிரலமான "ஜன்னா இங்கினில் ஜனிச்ச பூமியில் கனிகாடம் சிவசம்போ" என்ற பாடலை முன் மாதிரியாக வைத்து இசையமைக்கப்பட்டது என்று விஸ்வநாதன் அதே நேர்காணலில் கூறினார்.[3] படத்திலேயே இந்திந்த பாடலில் இருந்து மாற்றியமைக்கப்பட்டது என்று கூறுவது போல் வருவதாக படத்தயாரிப்பு தரப்பில் முதலில் கூறியதாகவும், பின்னர் படத்தில் அக்காட்சிகள் நீக்கப்பட்டு நேரடியாகவே பாடல் இடம் பெற்றுவிட்டது என்று விஸ்வநாதன் கூறினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia