டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (வரைகதை)
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (மந்திரவாதி) (ஆங்கிலம்: Doctor Strange) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோர் உருவாக்கினார்கள்.[1] டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்சின் முதல் தோற்றம் ஜூலை 1963 இல் இருந்தது ஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #110 இல் தோற்றுவிக்கப்பட்டது.[2] டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்சின் உண்மையான பெயர் ஸ்டீபன் வின்சென்ட் ஸ்ட்ரேஞ்ச் இவர் ஒரு அறுவை சிகிசிச்சை மருத்துவர் ஆவார். இவர் மந்திர மற்றும் மாஜயல ங்கள் மூலம் பூமிக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுபவர்கள். பூமியின் முதன்மை பாதுகாவலரான பணியாற்றுகிறார். இந்த பாத்திரம் முதன்முதலில் 1978 ஆம் ஆண்டு நடிகர் 'பீட்டர் ஹூட்டன்' என்பவரால் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற தொலைக்காட்சி திரைப்படமாக சித்தரிக்கப்பட்டது. மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), தோர்: ரக்னராக் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) ஆகியவற்றில் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச் என்பவர் நடித்துள்ளார். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia