டென்மார்க் தேசிய காற்பந்து அணி
டென்மார்க் தேசிய காற்பந்து அணி (Denmark national football team, Danish: Danmarks fodboldlandshold) என்பது பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் டென்மார்க்கின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, டென்மார்க்கு கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இவ்வணியின் உள்ளக விளையாட்டுகள் கோபனாவன் நகரில் அமைந்துள்ள தேலியா அரங்கில் நடத்தப்படுகின்றன. டென்மார்க் அணி 1908, 1912, 1960 கோடை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. 1986 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பைகளில் விளையாடத் தகுதி பெறவில்லை.[1] 1992 இல் ஐரோப்பியப் போட்டிகளில் பங்குபற்றி வாகை சூடியது. சுவீடனில் நடைபெற்ற இப்போட்டிகளில் நெதர்லாந்து அணியை அரையிறுதியிலும், செருமனி அணியை இறுதிப் போட்டியிலும் வென்றது. 1995 யூஏஎஃப்ஏ கூட்டமைப்புகளின் கோப்பையை அர்ஜென்டீனாவுக்கு எதிராக விளையாடி வென்றது. 1999 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் காலிறுதியில் 3–2 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோற்றது. தற்போதைய அணி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia