திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு
திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு , இந்திய மாநிலமான திரிபுராவின் பழங்குடியின வட்டாரங்களை ஆட்சி செய்யும் தன்னாட்சி மாவட்டக் குழு அமைப்பாகும். இதன் தலைமையகம் குமுல்வுங்கில் உள்ளது. பழங்குடியின மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்ள, இந்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன்வழி, ஆறாவது அட்டவணையின்படி, இந்த ஆட்சிக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆட்சிக் குழு 7,132.56 சதுர கி.மீ நிலப்பரப்பை நிர்வகிக்கிறது. இது திரிபுரா மாநிலத்தின் பரப்பளவில் 68% நிலப்பரப்பாகும். இந்த ஆட்சிக் குழுவுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதி காடு, மலைகளால் நிரம்பியுள்ளது. இந்த ஆட்சிக் குழுவுக்கு உட்பட்ட பகுதியில் 679,720 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் குழுவில் 30 உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 28 உறுப்பினர்கள் தேந்ர்தெடுக்கப்படுகின்றனர். இருவரை ஆளுநர் நியமிப்பார். 28 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் பழங்குடியினராக இருக்க வேண்டும் என்பது விதி. இந்தக் குழுவுக்கு சட்டமியற்றும் அதிகாரமும், செயலாற்றும் அதிகாரமும் உண்டு. டிசம்பர், 2020-இல் இந்த அமைப்பின் பெயர் திப்ரா பிரதேசக் குழு (Tipra Territorial Council (TTC) எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] தொகுதிகள்திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுவில் மொத்தமுள்ள 30 உறுப்பினர்களில் 28 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும்; 2 உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். 2021ஆம் நடைபெற்ற தேர்தலில் திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சிகள் கூட்டணி அமைத்து முறையே 16 மற்றும் 2 தொகுதிகளைக் கைப்பற்றினர்.[2][3]
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்![]() விக்கிமீடியா பொதுவகத்தில்,
திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு என்பதில் ஊடகங்கள் உள்ளன.
|
Portal di Ensiklopedia Dunia