திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்
திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும். அமைவிடம்இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 6 வது சிவத்தலமாகும். தல வரலாறுஇந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான். பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி" என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டதாக ஒரு ஐதிகம் உண்டு. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. வழிபட்டோர்இந்திரன், மயேந்திரன், சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia