திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவையாறுக்குக் கிழக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. தல வரலாறுஅந்தணச் சிறுவன் ஒருவனை எம தருமன் துரத்தி வந்தபோது சிறுவன் இத்தலத்தின் இறைவனிடம் தஞ்சம் புகுந்தான். அதன் பொருட்டு ஆபத்தில் இருந்த சிறுவனை இறைவன் காப்பாற்றியதால் ஆப்த சகாயேஸ்வரர் எனும் பெயர் இறைவனுக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது. தல பெருமை
திருவையாறு சப்தஸ்தானம்திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.[2] பாடப்பெற்ற தேவாரப் பதிகம்
திருஞானசம்பந்தர் தேவாரம், முதலாம் திருமுறை 067 திருப்பழனம் பாடல் 1 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மா 4 / மா காய்)
பூதஞ் சூழப் பொலிய வருவார் புலியி னுரிதோலார் நாதா வெனவு நக்கா வெனவு நம்பா வெனநின்று பாதந் தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே. 1 இவற்றையும் பார்க்கஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம் ![]()
|
Portal di Ensiklopedia Dunia