கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் தேவாரம்,பெரிய புராணம் பாடல் பெற்ற
ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்[ 1] ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்
[ 1] புவியியல் ஆள்கூற்று :11°02′47″N 79°29′40″E / 11.046385°N 79.494425°E / 11.046385; 79.494425 பெயர் புராண பெயர்(கள்) :கம்ஸபுரம், கம்சனூர், பராசரபுரம், அக்னிபுரம், முக்திபுரம், பலாசவனம், அக்கினித்தலம், பிரம்மபுரி[ 1] பெயர் :ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்[ 1] அமைவிடம் ஊர் :கஞ்சனூர் மாவட்டம் :தஞ்சாவூர் மாநிலம் :தமிழ்நாடு நாடு : இந்தியா கோயில் தகவல்கள் மூலவர் :அக்னீஸ்வரர் தாயார் :கற்பகாம்பிகை தல விருட்சம் :புரச மரம் தீர்த்தம் :அக்னி தீர்த்தம் பாடல் பாடல் வகை :தேவாரம்,பெரிய புராணம் பாடியவர்கள் :திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார் கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு :திராவிடக் கட்டிடக்கலை வரலாறு அமைத்தவர் :சோழர் கோயில் அறக்கட்டளை :மதுரை ஆதீனம்
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர் , சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும் . இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் , சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குட்பட்ட கோயிலாகும்.
கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).பலாச வனம் என்றும், அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தேவாரம் , பெரிய புராணம் , சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது.[ 1]
இது ஒரு தேவார வைப்புத்தலமாகும் . [ 2]
சிவபெருமானே, சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.
இறைவன் : அக்னீச்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
விருட்சம் : புரச மரம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
பதிகம் : அப்பர்
நவக்கிரகத் தலம் : சுக்ரன்
இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப்படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன. சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி, காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில், இது சுக்கிரனுடைய தலமாகும்.
சுக்கிரனின்
நிறம் : வெண்மை.
வாகனம் : முதலை
தான்யம் : மொச்சை
உணவு : மொச்சைப் பொடி கலந்த சாதம்
வச்திரம் (துணி) : வெள்ளைத் துணி
மலர் : வெண் தாமரை
இரத்தினம் : வைரம்
தலவரலாறு
அமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள், தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து, பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார். சாபம் பெற்ற தேவர்கள், வியாச முனிவரிடம் முறையிட, அவர் உத்திரவாஹினி என வழிபடப்படும் வடகாவிரியில் நீராடி, ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபட, சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார். தேவர்களும் அவ்வாறே வழிபட்டு, சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர்.
மதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்கு தனது பாவம் நீங்க வழிபட்டார்.
அக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால் பெற்ற சாபத்தால், ’பாண்டு ரோகம்’ நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்த்தார். இதனால் இத்தல இறைவனுக்கு, அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.
அக்னிதேவனின் நோயால் ஆரம்பித்த யாகம் தடைபட்டதால், படைப்புத் தொழிலைத் தொடங்க முடியாத பிரம்மதேவரும் இங்கு வந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, அவர் அருளால் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். இதனால் இத்தலத்தில் ஓடும் காவிரி நதிக்கு ’பிரம்ம தீர்த்தம்’ என்ற பெயர் ஏற்பட்டது.[ 1]
மாண்டவ்ய மகரிஷியின் புத்திரர்களின், ’மாத்ருஹத்தி’ தோஷத்தை போக்கிய தலம்.
தலவிருட்ச பெருமை
இத்தலத்து தலவிருட்சத்தை, ஒரு மண்டல காலம், பதினாறு முறை சுற்றி வந்து வழிபட, கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கையாகும்.
நாயனார்கள் வாழ்வில் இத்தலம்
மானக்கஞ்சார நாயனார் அவதரித்த தலம்.
கலிக்காம நாயனார் திருமணம் நடைபெற்ற தலம்.
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள்
ஆகிய தலங்களாகும்.[ 3]
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்பு
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 1.2 1.3 குமுதம் ஜோதிடம்; 29.04.2011; பக்கம் 4-8
↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
↑ ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
நவக்கிரகங்கள் நவக்கிரகக் கோயில்கள் சூரியக் கோயில்கள் சந்திர கோயில்கள் குரு கோயில்கள் ராகு கோயில்கள் புதன் கோயில்கள் சுக்ரன் கோயில்கள் கேது கோயில்கள் சனி கோயில்கள் செவ்வாய் கோயில்கள்
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்
முந்தைய திருத்தலம்:பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயில்
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்
அடுத்த திருத்தலம்திருக்கோடிகா
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 36
தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 36
தேவார வைப்புத்தலங்கள்
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை அகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/
கஞ்சனூர் · அசோகந்தி /அயோகந்தி
· அணி அண்ணாமலை/
அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/
அன்னவாசல் · அத்தீச்சுரம்/
சிவசைலம் · அயனீச்சுரம் /பிரம்மதேசம்
· அரிச்சந்திரம்-பாற்குளம்/
அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/
தரங்கம்பாடி · அவல்பூந்துறை /பூந்துறை
· ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/
அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி /திருமேற்றளி
· ஆலந்துறை/
அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/
மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/
இரும்புதலை · இறையான்சேரி/
இரவாஞ்சேரி · இறையான்சேரி/
இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர் -மேலை ஈசனூர்
· உருத்திரகோடி/
ருத்ராங்கோயில் -திருக்கழுக்குன்றம்
· ஊற்றத்தூர்/
ஊட்டத்தூர் · எழுமூர் /எழும்பூர்
· ஏமநல்லூர்/
திருலோக்கி · ஏமப்பேறூர்/
திருநெய்ப்பேறு · ஏர்/
ஏரகரம் · ஏற்றமனூர் /எட்டுமனூர்
· ஏழூர்/
ஏளூர் · கச்சிப்பலதளி/
கச்சபேசம் ,
கயிலாயம் ,
காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/
கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/
கீழக்கடம்பூர் · கண்ணை/
செங்கம் · கந்தமாதன மலை /திருச்செந்தூர் கோயிலில் உள்ளது
· கரபுரம்/
திருப்பாற்கடல் ,
விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி /கரந்தை
· கருப்பூர்/
கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/
களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/
திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி /காம்ப்லி
· காரிக்கரை/
ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/
கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/
புங்கனூர் · குணவாயில் (கேரளம்)
· குண்டையூர் · குத்தங்குடி/
கொத்தங்குடி · குன்றியூர்/
குன்னியூர் · குமரிக்கொங்கு/
மோகனூர் · குரக்குத்தளி/
சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர் /குழையூர்
· கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/
கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/
கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/
கோவிலடி · சித்தவடமடம்/
கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி /திருச்செம்பள்ளி
· சூலமங்கை/
சூலமங்கலம் · செந்தில்/
திருச்செந்தூர் · செந்துறை/
திருச்செந்துறை · செம்பங்குடி /செம்மங்குடி
· சேலூர்/
மட்டியான்திடல் ,
கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/
தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/
தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/
கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/
வட கண்டம் · தவத்துறை/
லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/
திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/
செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை /திருமலைராயன்பட்டினம்
· திருவேகம்பத்து · திருவேட்டி/
திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர் /தொடையூர்
· தென்களக்குடி/
களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/
வடிவீஸ்வரம் · தோழூர்/
தோளூர் · நந்திகேச்சுரம்/
நந்திவரம் · நந்திகேச்சுரம்/
நந்திமலை · நல்லக்குடி/
நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/
நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/
நேமம் · நெடுவாயில்/
நெடுவாசல் · நெய்தல்வாயில்/
நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/
பண்ணூர் · பரப்பள்ளி/
பரஞ்சேர்வழி · பழையாறை/
கீழப்பழையாறை · பிடவூர்/
திருப்பட்டூர் · பிரம்பில்/
பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/
புரிசை · புலிவலம் · பூந்துறை/
சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/
பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/
பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/
பொன்னூர் · பொய்கைநல்லூர் /பொய்யூர்
· மணற்கால்/
மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/
ஆத்தூர் · மாகாளம்/
ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம்,
உஜ்ஜயினி · மாகுடி/
மாமாகுடி · மாட்டூர்/
சேவூர் · மாட்டூர்/
மாத்தூர் · மாந்துறை/
திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர்,
எறையூர் · மிழலைநாட்டு மிழலை/
தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/
வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/
காசி · விடைவாய்க்குடி/வாக்குடி,
வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/
பீமாவரம் · வெற்றியூர்/
திருவெற்றியூர்
மாநிலம் பகுதி திருவையாறு சப்தஸ்தானம் கும்பகோணம் சப்தஸ்தானம் சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்) மயிலாடுதுறை சப்தஸ்தானம் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் நாகப்பட்டினம் சப்தஸ்தானம் திருநல்லூர் சப்தஸ்தானம் திருநீலக்குடி சப்தஸ்தானம் திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்