பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள்
பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. தமிழியலின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சங்க காலத்தில் துணைப்பெயர்கள்: இலக்கியம் மற்றும் பழங்குடியினர் இந்தப் பொருண்மையில் ஆரம்பகால அணுகுமுறைகளை முன்வைக்கிறது. பின்னணிசங்க இலக்கியம், அகம் என்றும் புறம் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சங்ககாலக் கவிஞர்கள் தங்கள் பாட்டுடைத்தலைவன், நாயகி, நண்பர்கள் ஆகியோரின் பெயர்களைப் பற்றி தம் கவிதைகளில் குறிப்பிடவில்லை. தம்முடைய கவிதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வுகளின் உலகளாவிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக அவ்வகையான உத்தியைக் கையாண்டு இருக்கின்றனர்.[1] தொல்காப்பியம் வகைப்பாடுகள்தொல்காப்பியம் பத்து வகையான பெயர்களை அடையாளம் காட்டுகிறது. அன்னி மிருதலகுமாரி தாமசு தமிழர்கள் தங்கள் பெயர்களை ஏற்றுக்கொண்ட அடிப்படையை முழுமையாக வெளிப்படுத்தியதாககூறுகிறார்.[2] வைல்டன் வகைப்பாடுகள்சங்க இலக்கியத்தில் காணப்படுகின்ற நான்கு வகையான பெயர்களை ஈவா வைல்டன் அடையாளம் காண்கிறார். ஒரு இடத்தின் பெயர் அல்லது ஒரு வம்சத்துடன் தொடர்புடைய பொதுப்பெயர்கள், அடைமொழிகள் அல்லது கற்பனைப்பெயர்களுடன் தொடர்புடைய பொதுப்பெயர்கள், என அது வகைபடுத்தப்படுகிறது. இந்த உத்தியானதுதொல்காப்பியத்தில் ஒரு வகைப்பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டது. தந்தை பெயர்இந்த மரபின்படி ஒருவரின் பெயருடன் தந்தையின் பெயர் தொடர்ந்து காணப்படும். இடைக்காலம் வரை இந்த மரபானது பின்பற்றப்பட்டு வந்தது.[3] இதற்கு உதாரணமாக சேரனின் மகன் என்பதைக் குறிக்கும் வகையில் சேரமான் என்பதாகும். இதில் சேரன் மற்றும் மகன் என்ற சொற்கள் அடங்கியுள்ளன. அதைப்போலவே வேலின் மகன் என்பதைக் குறிக்க வேல்மகன் என்ற முறை பயன்படுத்தப்பட்டது.[4] ஒரு பெயரின் ஐந்து பகுதிகள்வம்சப் பெயரைத் தொடர்ந்து பொதுப்பெயரை இடுதல் என்பதானது மரபாக இருந்துவந்துள்ளது. இருந்தாலும் புகழ்பெற்ற நபர்கள் என்ற வகையில், அது ஐந்து பாகங்களைக் கொண்டு அமைந்துள்ளது. பரிமேலழகர் (13 ஆம் நூற்றாண்டு) செவ்வியல் கால மரபினை அடியொட்டி தன் விளக்கத்தைத் தருகின்றார். யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை என்ற சரியான பெயருக்கு கோசீமாறன் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை என்ற பெயரைக் குறிப்பிடுகிறார். கோ என்றால் மன்னன் என்ற அலுவலகப்பெயரைக் குறிக்கும், சேரமான் என்பது வம்சத்தைக் குறிக்கும், யானைக்கண் என்பது வித்தியாசமான குணத்தைக் குறிக்கும். சேய் என்பது இயற்பெயர் அல்லது பொதுப்பெயராகும். இரும்பொறை என்பது இணைப்பாகும். மற்றொரு உதாரணமாக மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்ற பெயரைக் கூறலாம். மலையமான் என்பது வம்சத்தின் பெயராகும். சோழிய என்பது சோழ நாட்டைக் குறிக்கும். ஏனாதி என்பது மன்னனால் படைத்தலைவனுக்கு ஏனடிப்பட்டயம் என்ற விழாவின்போது வழங்கப்பட்ட பெயரைக் குறிக்கும். திருக்கண்ணன் என்பது இயற்பெயராகும். வம்சத்தின் பெயர்குடும்பம் அல்லது வம்சப் பெயரைச் சூட்டுவதற்காக, கவிஞர்கள் மன்னர்களிடம் விவாதித்துள்ளனர். வம்சத்தினை அடிப்படையாகவோ அல்லது குடும்பத்தை அடிப்படையாகவோ கொண்ட பெயர் ஒரு முன்னொட்டாக அமைக்கப்படுகிறது. அது உண்மையான பெயருக்கு முன்பாக சேர்க்கப்படுகிறது.[5] பட்டங்கள்கோ என்ற சொல்லுக்கான மன்னன் என்ற பட்டங்கள் காணப்படுகின்றன. அவ்வாறே சில பெயர்கள் மன்னனால் சூட்டப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. அத்தகைய புகழ்பெற்ற மூன்று பட்டங்களாக எத்தி, ஏனாதி, காவிதி போன்ற பெயர்களைக் கூறலாம்.[6] தலைக்கோலி, பேரையன், மாரையன் போன்ற பட்டங்கள் முக்கியமானவர்களுக்கு அவரவர்களின் துறையில் அவர்கள் வெளிப்படுத்திய திறமையின் அடிப்படையில் தரப்பட்டதாக அமைகின்றன. தங்களது திறமையை கவனத்தில் உள்ள சிறந்த பிரமுகர்கள் வழங்க பிற தலைப்புகளில் ஒரு சில உள்ளன.[7] குறிப்புகள்
நூற்பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia