பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு 2023பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு (Women Peace and Security Index) பெண்களின் பாதுகாப்பு, நீதி மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப்படுத்துகிறது. [1] காலப்போக்கில் நாடுகளையும் அவற்றின் வளர்ச்சிப் போக்குகளையும் ஒப்பிடுவதற்கு இந்தக் குறியீடு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [2] [3] [4] விளக்கம்நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக்கான சியார்ச்சு டவுன் நிறுவனம் இந்த குறியீட்டை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2023 வரை, நான்கு குறியீட்டு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் மொத்தம் 13 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகின்றனர், வேலைவாய்ப்பு, கல்வி விதிமுறைகள் முதல் வன்முறை மற்றும் பாதுகாப்பு பற்றிய உணர்வுகள் வரை இக்குறிகாட்டிகளில் இடம்பெற்றுள்ளன. [5] இந்த குறியீடு ஆயுத மோதல்கள், நிதி உள்ளடக்கம், பாராளுமன்ற இடங்களின் பங்கு மற்றும் பிற அளவுருக்கள் ஆகியவற்றின் அருகாமையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. [6] உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காலப்பு உலக மகிழ்ச்சி அறிக்கை போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. [7] நாடுகள்மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia