இந்தப் பட்டியலினையும், மல்லிகை என்ற கூகுள் மொழிப்பெயர்ப்பு கட்டுரையின் சில தமிழாக்கத்தினையும், ஆங்கில கட்டுரையையும் பயன்படுத்தி தமிழில் காட்டு மல்லி என்ற கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இது போன்ற எளிய கட்டுரைகள் பலவற்றை en:category:Articles with 'species' microformats என்ற ஆங்கில விக்கிப்பீடியாவின் பகுப்பில் உள்ளன. இவற்றின் அளவு சிறிதாக இருந்தாலும், அதன் மேற்கோள் நுட்பம், தாவரவியல் வகைப்பாட்டியல் முறைமை நுட்பமானது இவை நமது கட்டுரை எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் . எடுத்துக்காட்டாக, முதல் இருபெயரீட்டு முறைக்கு காட்டு மல்லி என்பதை உருவாக்கியுள்ளேன். இதில் விருப்பம் உள்ளோர் இங்கு தெரிவிக்கவும். நாம் இணைந்து நுட்ப அடிப்படையில் ஒரு படம், ஒரு பன்னாட்டு மேற்கோள், ஒரு தாவரப்பெட்டி(Taxobox) கொண்டு கட்டுரைகளை உருவாக்கலாம். த♥உழவன்(உரை) 18:36, 23 செப்டம்பர் 2023 (UTC)
வார்ப்புரு மேம்பாடும், பக்கத் தவறுகளும்
மல்லிகை இனப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பல கட்டுரைகளை உருவாக்க அது தொடர்புடைய வார்ப்புருக்களை மேம்படுத்தினேன். அதனால் எழுந்த வழுக்களைக் கீழ்கண்ட இணைப்புகளைப் பார்க்கவும்.
இந்த பொதுப்பெயரை நீக்கி, தாவரவியல் பெயரினை மட்டும் எழுதியுள்ளேன்.
Jasminum officinale என்பது பொதுவாக அழைக்கப்படும் மல்லிகை எனக் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் இதனை ஊசி மல்லி என்பர்.
மல்லிகை, கொகுடி, இருள்நாறி ஆகிய மூன்று கட்டுரைகளும் Jasminum sambac என்ற தாவரவியல் பெயருக்கு உள்ளன. இக்கட்டுரைகளில் உள்ள தரவுகள் பொருத்தமாக கட்டுரைகளுக்கு ஏற்ப இல்லை. இவை மூன்றும் சிற்றினங்களைக் குறித்தவை ஆகும்.
இப்பட்டியலில் உள்ள பிற இனக் கட்டுரைகளை எழுத காட்டு மல்லி என்ற கட்டுரையையும், அதன் தகவற்பெட்டியிலுள்ள சிவப்பு இணைப்புகளுக்குரிய 10க்கும் மேற்பட்ட ஆங்கிலக்கட்டுரைகளை, (எ-கா - வார்ப்புரு:Anglicise rank) தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளேன். உங்கள் எண்ணங்களை அறியத் தருக. த♥உழவன்(உரை) 06:38, 28 செப்டம்பர் 2023 (UTC)
பொதுகள உரிமத்தில் படங்கள்
கீழ்கண்ட இணையப் பக்கங்கள் பொது உரிமத்தில் படங்களைத் தருகின்றன. எனினும் உரிய இனங்களைக் கண்டு இதன் கட்டுரைகளை வகைப்பாட்டியல் தகவற்பெட்டியோடு உருவாக்க வேண்டும்.
மேலுள்ள தரவுகள் மல்லிகை என்ற கட்டுரையில் இருந்தன. தாவரவியல் பெயர்களை அவரவர் மொழியில் மாற்றக்கூடாது என்பது பன்னாட்டு விதி. ஏனெனில் செய்தி பரிமாற்றத்தின் போது குழப்பம் ஏற்படாமல் இருக்க உலக அறிஞர்கள் இலத்தீனிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று பன்னாட்டு அறிஞர் பின்பற்றும் விதியை நாமும் பின்பற்றுவோம். ஒலிபெயர்ப்பு செய்யாமல், காட்டு மல்லி போன்று தமிழ் ஆக்கம் செய்து பயன்படுத்துவதே சிறப்பாகும். மேலுள்ள தரவுகள் அக்கூகுள் கட்டுரையில் இருந்து அப்படியே இங்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஒப்பிட்டறிக. மூலப்பக்கம் - மாற்றப்பதிவேடுத♥உழவன்(உரை)02:20, 1 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
Yஆம். ஐயமின்றி அறிந்தேன். ஆசிய பெருமல்லி இனத்தில் இரண்டு துணை இனங்கள்( Jasminum grandiflorum subsp. floribundum & Jasminum grandiflorum subsp. grandiflorum ) உள்ளன. அவற்றில் ஒன்று அரபு, ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் காணப்படுகிறது. மற்றொன்று (Jasminum grandiflorum subsp. grandiflorum ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. அதுவே சாதி மல்லியாகும். த♥உழவன்(உரை)16:43, 27 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
பொதுவாக தமிழர்கள் அழைக்கும் பெயர்களின் தாவரவியல் பெயர்களைக் கண்டறிந்து எழுதுதல் என்பது பின்பற்றப் படுகிறது. இது குறித்த ஆவணங்கள் குறைவு. பிற மல்லி இனங்களுக்கு அதன் தாயகப் பெயரும், அதன் ப யன்பாடுகளைக் கொண்டும் பெயர்கள் தமிழில் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாயகத்தினைக் குறித்தும் பன்னாட்டு அறிஞர்கள் இணைய ஆவணங்களாக உருவாக்கியுள்ளனர். அவற்றிற்குரிய இணைப்புகள், ஒவ்வொரு கட்டுரையிலும் இணைக்கப்பட உள்ளன. மாற்று எண்ணமிருப்பவர்கள் அந்தந்த கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டால் நான் கற்றதை பகிர்வேன். பைத்தான்3 நிரல் வழியே சான்றுகளை இணைத்திருக்கிறேன். மற்றொருவரும், சான்றிணைப்புகள் சரியான இனங்களைக் காட்டுகிறதா என சரிபார்த்தல் நலம். த♥உழவன்(உரை)03:00, 24 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
இலக்குகள்
Y பன்னாட்டுத் தாவரவியல் பெயர்களுக்கு ஏற்ப, கிரந்தம் இல்லா தமிழொலிப்பு பெயர்கள் முன்மொழிவாக இணைக்கப்பட்டன.
Yமேலும், மேற்கூறிய பன்னாட்டு ஒலிப்புப்பெயர்கள், அவ்வினத்தின் பிறப்பிடங்களைக் கொண்டு, மல்லிகை இனங்களின் தமிழ் பெயர்கள் முன்மொழியப் பட்டுள்ளன.
பெயர்களுக்கான முன்மொழிவு
இப்பிரிவில் பன்னாட்டு மல்லியினங்களுக்கு பொருத்தமான பெயர்களை முன்மொழியலாம்; முன்மொழிந்தவைகள் குறித்து கலந்துரையாடலாம்; பிறரோடு பகிரலாம்.
நுட்பம்:
2022 ஆம் ஆண்டு கியூ(powo) அறிவிப்பில் பன்னாட்டினர் ஏற்றுக்கொண்ட 201 இனங்களில் கீழுள்ளவை மட்டும் ஒரேஒரு பிறப்பிடத்தைக் கொண்டவை ஆகும். எனவே, அவை மட்டும் பெயரிடலுக்காக கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.