கிரைசோயாசுமினம் உமைல்
கிரைசோயாசுமினம் உமைல் (தாவர வகைப்பாட்டியல்: Chrysojasminum humile) என்பது முல்லைக் குடும்பத்தின் தாவரங்களில் ஒன்றாகும். 1753 ஆம் ஆண்டு இது குறித்த முதல் பதிப்பேடு உள்ளது.[1]. பின்பு, 2014 ஆம் ஆண்டு தாவரவியல் ஆய்வாளர்களால், இத்தாவரம் மல்லிப் பேரினத்தில் இருந்து, மஞ்ச மல்லிப் பேரினத்திற்கு (Jasminum--> Chrysojasminum) மாற்றப்பட்டது.[2][3] இந்த மஞ்ச மல்லிப் பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[4], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[5] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. தோட்டங்களுக்குரிய பல பயிரிடும் வகைகள் உருவாக்கப்பட்டன. இதற்காக ஓரினத்திற்கு(J. reevesii ) , விருதும் [கு 1] வழங்கப்பட்டது [6][7] இதன் இப்போதைய தாவரவியல் பெயர் , Jasminum humile என்பதில் இருந்து, Chrysojasminum humile என மாற்றியமைக்கப் பட்டது. வளரியல்பு2.5–4 m (8–13 அடி) உயரம் வளரும்; 3 m (10 அடி) அகலம் பரந்து இருக்கும். இவற்றின் தண்டு வட்ட வடிவிலும், தடித்தும் அமைந்து செடி பருத்து காணப்படும். இலைகள் அடர் பச்சை நிறமாகவும், ஏறத்தாழ 5 செ.மீ நீளமாகவும், 5-7 இலைத்தாளையும் கொண்டிருக்கும். பனிக்காலங்களில் இதன் மொட்டுகள் உறைந்தும் இருக்கும். கோடை, இளவேனிற் காலங்களில் இதன் பூக்கள் மலரும் இயல்புடையது. ஏறத்தாழ ஆறு பூக்கள் ஒன்றாக பூச்செண்டு போல தோற்றமளிக்கும்.[8][9][10] குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia