மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) என்பது இந்திய மத்திய அரசின் நிர்வாக நிறுவனம் ஆகும். இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து 19 ஜூலை, 2016 அன்று தகவல் தொழில்நுட்பக் கொள்கை, உத்தி மற்றும் மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு பொறுப்பான ஒரு முழுமையான அமைச்சக நிறுவனமாக உருவாக்கப்பட்டது.[4] வரலாறுமுன்னதாக "தகவல் தொழில்நுட்பத் துறை" என்று அழைக்கப்பட்ட இது 2012 இல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை என மறுபெயரிடப்பட்டது. [5] தகவல் தொழில்நுட்பத் துறை 2016, ஜூலை 19 அன்று, முழு அளவிலான அமைச்சகமாக மாற்றப்பட்டது. அன்று முதல் இது மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் என்று அழைக்கப்படுகிறது, இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து பிரிக்கப்பட்டதாகும். [6] [7] திட்டங்கள்மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்னணு இந்தியா பயிற்சித் திட்டம் 2019, என்.ஐ.சி (2019 தொகுதி) க்கான மின்னணு இந்தியா(டிஜிட்டல் இந்தியா)வேலை வாய்ப்பு அல்லது பயிற்சித் திட்டம் (வெளி இணைப்பு), வணிக செயல்முறை புற ஒப்படைப்பு உயர்வு திட்டங்கள், மின்னணு வன்பொருள் திட்டங்கள், முனைவர் பட்டத் திட்டங்கள் ஆகியவை இந்த அமைச்சகத்தின் திட்டங்கள் ஆகும்.[8] பணிகள்குடிமக்கள் மேம்பாட்டிற்கான மின்-ஆளுமையை ஊக்குவித்தல், மின்னணுத்துறையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல்,தகவல் தொழில்நுட்பம் இயக்கச் சேவைகள் வழங்குதல், தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைத் தொழில்கள், இணைய நிர்வாகத்தில் இந்தியாவின் பங்கை மேம்படுத்துதல், மனித வளங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையை பின்பற்றுதல், ஆய்வு மற்றும் வளர்ச்சியில் புதுமைகளை ஊக்குவித்தல், மின்னணுச் சேவைகள் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான இணைய இடத்தை உறுதி செய்தல் ஆகியன இந்த அமைச்சகத்தின் பணிகள் ஆகும்.[8] சேவைகள்இந்தியா முழுவதிலும் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள்,மின்னணுச் சேவைகள், தகவல் தொழில்நுட்ப இயக்கச் சேவைகள் யாவும் மின்னணுவாக்கம் செய்யப்பட்டு இத்துறையின் உதவியோடு செயல்படுத்தப்படுகின்றன.[9] முகவாண்மை அமைப்புகள்பின்வருவது "மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய குடியரசின் மத்திய அரசு" என்பவற்றில் உள்ள அமைப்புகளின் பட்டியல். [10] தேசிய தகவல் மையம் (என்ஐசி) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள நிறுவனங்கள்மீடியா லேப் ஆசியா (எம்.எல்.ஏசியா) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தன்னாட்சி சங்கங்கள்கணினி வலையமைப்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ERNET) அமைச்சர்கள்அமைச்சர்களின் பட்டியலுக்கு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (இந்தியா)பார்க்கவும். [11]
இவற்றையும் பார்க் ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia