கிரிதர் கமாங்
கிரிதர் கமாங் (Giridhar Gamang)(பிறப்பு 8 ஏப்ரல் 1943) என்பவர் இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர்[1] மற்றும் ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். இவர் 2015-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவர் ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள திபிரிசிங்கி கிராமத்தில் பிறந்தார். 1972ல், கோராபுட்டில் இருந்து 5வது மக்களவைக்கு முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் மக்களவைக்கு மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் 17 பிப்ரவரி 1999 முதல் 6 திசம்பர் 1999 வரை ஒடிசாவின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.[2][3] இவரது மனைவி ஹேமா கமாங் ஆவார். கிர்தர் கமாங் ஒடிசாவின் முதலமைச்சராக இருந்தபோது, ஹேமா கமாங், 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் 13வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் கோராபுட் தொகுதியிலிருந்து வெற்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டில், கமாங் 12வது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஒடிசாவின் முதல்வரானார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. கிரிதர் காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர் என்பதால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்றத்திற்குச் சென்றார். (இவர் முதல்வர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகிய ஒன்றிலிருந்து விலக வேண்டியிருந்தது, இருப்பினும் 6 மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம்). பாஜக அரசு 1 வாக்கு வித்தியாசத்தில் (269–270) அதிகாரத்தை இழந்தது. மேலும் கிரிதர் வாக்களிக்காமலிருந்திருந்தால், சபாநாயகர் ஜி. எம். சி. பாலயோகி தனது வாக்கைப் பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றியிருப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அரசாங்கத்தின் வீழ்ச்சி காரணமாக நாடு மே 1999-ல் மற்றொரு பொதுத் தேர்தலை உடனடியாக சந்திக்க நேர்ந்தது.[4] பின்னர் 2009 தேர்தலில் கோராபுட் மக்களவைத் தொகுதியில்பிஜு ஜனதா தளத்தின் செயராம் பாங்கியிடம் முதல்முறையாகத் தோல்வியினைச் சந்தித்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia