மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)![]() மியான்மர் உள்நாட்டுப் போர் (Myanmar Civil War), மியான்மர் நாட்டை 2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் ஆளும் சர்வாதிகார இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராக மியான்மர் மக்களின் பல ஆயுதக் குழுக்கள் மே 2021 முதல் நடத்துகின்ற போர் ஆகும். 5 டிசம்பர் 2024 முடிய உள்நாட்டுப் போரில் 73,069+ பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.[1] 1 மே 2024 முடிய 4,961 பொதுமக்கள் மற்றும் 26,601 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.[2] 27,17,500 முதல் 3,0,00,000 வரை வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ளனர். மேலும் 1,13,700 மக்கள் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ளனர். பின்னணி2020 மியான்மர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி மிகப்பெரும்பான்மையான (83%) தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாய முன்னணி கட்சி வெற்றி பெற்றது செல்லாது என மியான்மர் இராணுவம் குற்றம் சாட்டியதுடன், 1 பிப்ரவரி 2021 அன்று இராணுவப் புரட்சி மூலம்[3][4][5]நாட்டில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தியும், நாடாளுமன்றத்தை முடக்கியும், ஆங் சான் சூச்சியை வீட்டுக் காவலில் வைத்தனர். இதனால் நாடு முழுவதும் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களும், வன்முறைகளும் எழுச்சி பெற்றது.[6][7] இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களால் மார்ச் 2023 முடிய எல்லைப்புற மாநிலங்களில் வாழும் 17.5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்றும், 1.6 மில்லியன் பொதுமக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும்; 55,000 குடியிருப்புகள் குண்டு வீச்சுகளால் அழிந்துள்ளது என ஐ. நா. மதிப்பீடு செய்துள்ளது.[8] மியான்மரிலிருந்து 40,000 பேர் அண்டை நாடுகளான வங்காளதேசம், இந்தியா, தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளில் மக்கள் அடைக்கலம் அடைந்துள்ளனர்.[9] அக்டோபர் 2023 முடிய மியான்மரின் 40% நிலம் அரசு தரைப்படை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பங்கு உள்ளாட்சிகள் (330 உள்ளாட்சிகள்) அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. [10][11] இராணுவ ஆட்சிக்கு எதிரான போராளிகளின் படைகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia