மைசூர் - மயிலாடுதுறை விரைவு வண்டி
மயிலாடுதுறை-மைசூர் விரைவுவண்டி (Mysore–Mayiladuthurai Express) என்பது கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு இரயில்வேயால் தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறையில் இருந்து கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூருக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் ஒரு விரைவு வண்டி ஆகும். இது தினசரி மயிலாடுதுறையில் இருந்து மாலை புறப்பட்டு மறுநாள் காலை மைசூரைச் சென்றடைகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் மாலை மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை மயிலாடுதுறையை அடைகிறது. இது வாரத்தின் அனைத்து நாட்களும் இயங்குகிறது. வரலாறுஆரம்பத்தில், 31/32 என எண்ணிடப்பட்ட இந்தத் தொடருந்து சேவை ஈரோட்டில் ஐலண்ட் விரைவு வண்டியுடன் உடன் இணைக்கப்பட்ட 4 இணைப்பு பெட்டிகளுன் பயணத்தில் இருந்தது. பின்னர், அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த சி. கே. ஜாஃபர் ஷெரீப், பெங்களூரு மற்றும் திருச்சி இடையே, தெற்கு ரயில்வே மண்டலத்தின் பெங்களூரு ரயில்வே கோட்டத்தால் செயல்படுத்தப்பட்ட 6531/6532 எண்ணிட்ட பெங்களூர்-திருச்சியிடையே தனிப்பட்ட தொடருந்தை அறிமுகப்படுத்தினார். நீட்டிப்புஆரம்பத்தில் இந்தத் தொடருந்தில் சில பெட்டிகள் இணைக்கப்பட்டு கரூரிலிருந்து மதுரைக்கு 6531A/6532A எனப் பிரிக்கப்பட்டன. தொடருந்து எண் 6531/6532 லிருந்து 6231/6232 ஆக மாற்றப்பட்டு, முதலில் மைசூர் வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் தஞ்சாவூருக்கும் அதன் பின்னர் நாகூர் வரையும் நீட்டிக்கப்பட்டது.[1]ஜூன் 29, 2002 இல் இத்தொடருந்து சேவை மைசூர் இரயில்வே கோட்டத்தில் இருந்து [[திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்திற்கு மாற்றப்பட்டதால், தொடருந்து எண் 6231/6232 லிருந்து 6831/6832 ஆக மாற்றப்பட்டு திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டம் மண்டியாவின் மத்தூர் நிலையத்தில் தொடருந்து நிற்பது நீக்கப்பட்டது.[2] . 1995-1996 ரயில்வே வரவு-செலவு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட திருச்சி-நாகூருக்கிடையே பாதை மாற்றத்தைச் செயல்படுத்துவதற்காக திருச்சி-நாகூர் சேவை குறைக்கப்பட்டது. [3] திருச்சி-தஞ்சாவூர் பகுதியின் பாதைமாற்றப் பணி 1998 இல் நிறைவடைந்ததால், சேவை மீண்டும் தஞ்சாவூருக்கு நீட்டிக்கப்பட்டது.[1] சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் வழித்தடத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் பகுதியின் பாதைமாற்றப் பணி அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், கும்பகோணம் வரை சேவையை நீட்டித்தார்.[4][5] இது ஜனவரி 6, 2006 முதல் தொடருந்து எஎண் 6831/6832 என்பது 6231/6232 என்ற மாற்றத்துடன் செயல்படுத்தப்பட்டது.[6][7] ஜூன் 17, 2006 முதல் இந்த சேவை மயிலாடுதுறை சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.[8][9][10][11] திசம்பர் 2010 முதல் இந்தத் தொடருந்தின் எண்ணானது 6231 / 6232 இலிருந்து 16231 / 16232 ஆக மாற்றப்பட்டது.[12][13] பயண நேரத்தையும் பயணச்சீட்டுத்தொகையையும் குறைக்கும் வகையில், இத்தொடருந்தை சேலம்-நாமக்கல்-கரூர் தடத்தில் மாற்றிவிடவேண்டுமென காவிரி டெல்டாப்பகுதிவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர். பயணம்வண்டி எண் 16231/மயிலாடுதுறை→மைசூர் விரைவு வண்டி 057கிலோமீட்டர் என்ற வேகத்தில் 677 கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 14மணி 05நிமிடங்களில் கடக்கிறது. மறுமார்கத்தில் 16232/மைசூர்–மயிலாடுதுறை விரைவு வண்டி அதேபோல் 57கி.மீ என்ற வேகத்தில் 677கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 14மணி 25நிமிடங்களில் கடக்கிறது. இதன் குறைந்தபட்ச வேகம் 57கி.மீ ஆகும். அதிகபட்ச வேகம் 110கி.மீ ஆகும் கால அட்டவணை
சில முக்கிய நிறுத்தங்கள்: கும்பகோணம், தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, ஓசூர் மற்றும் பெங்களூர். இந்த தினசரி ரயில் மயிலாடுதுறையில் இருந்து ஒவ்வொரு மாலையும் மைசூர் எக்ஸ்பிரஸ் என புறப்பட்டு, திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இரண்டு முறை எஞ்சினை திருப்பி, மறுநாள் காலை மைசூர் வந்தடைகிறது. மயிலாடுதுறை விரைவு வண்டி, மதியம் மதியம் 16232, அதே வழியைப் பின்பற்றி இரண்டு முறை எஞ்சினை திருப்பி, மறுநாள் காலை மயிலாடுதுறை சந்திப்பை வந்தடைகிறது.[a] ![]()
பெட்டிகள்இந்தத் தொடருந்தில் ஆரம்பத்தில் 16 பெட்டிகள் இருந்தன, கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி ஜூலை 1, 2005 அன்று சேர்க்கப்பட்டது.[16] மேலும் ஒரு படுக்கை வசதி பெட்டி ஜூன் 6, 2013 அன்று சேர்க்கப்பட்டது,[17] மேலும் இரண்டு கூடுதல் படுக்கை வசதி பெட்டிகள் ஜூன் 8, 2013 அன்று சேர்க்கப்பட்டன.[18] தற்போது, இந்த வண்டியில் ஒரு குளிர்சாதன இரண்டாம் வகுப்பு (2 ஏ), இரண்டு குளிர்சாதன மூன்றாம் வகுப்பு (3 ஏ), 12 படுக்கை வசதி பெட்டிகள் (எஸ்எல்), 4 முன்பதிவு செய்யப்படாத (பொது) பெட்டிகள் (யுஆர்/ஜிஎஸ்) மற்றும் இரண்டு சாமான் பெட்டிகள் (எஸ்எல்ஆர்) என 21 பெட்டிகள் உள்ளன.[b]
வண்டி பரிமாற்றம்திருச்சிராப்பள்ளி-மயிலாடுதுறை விரைவு வண்டி, மைசூர்-தூத்துக்குடி விரைவு வண்டி இரண்டுடனும் தனது பெட்டிகளை இத்தொடருந்து பகிர்ந்து கொள்கிறது. மேற்கோள்கள்
குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia