ஒரு நாளிள் 110 அதிவிரைவு இரயில்கள் ஒரு நாளிள் 40 பயணிகள் இரயில்கள்
அமைவிடம்
திருச்சிராப்பள்ளி சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்.
Show map of தமிழ்நாடு
திருச்சிராப்பள்ளி சந்திப்பு
திருச்சிராப்பள்ளி சந்திப்பு (இந்தியா)
Show map of இந்தியா
திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tiruchirappalli Junction railway station, நிலையக் குறியீடு:TPJ) தென்னிந்தியாவின் முக்கியமான தொடருந்து சந்திப்புகளுள் ஒன்றான இது, தமிழகத்தில்திருச்சிராப்பள்ளி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது இந்திய இரயில்வே தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. மேலும் இந்த இரயில் நிலையம் ஆனது தென்னக இரயில்வே மண்டலத்தின் இரண்டாவது பெரிய இரயில் நிலையம் ஆகும்.
வரலாறு
1853-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியை தலையிடமாகக் கொண்டு, தென்னக இரயில்வே (The Great Southern of India) உருவாக்கப்பட்டது.
[1] 1859-ஆம் ஆண்டில், தென்னகத்தின் முதல் இருப்புப் பாதையான திருச்சிராப்பள்ளி - நாகப்பட்டினம் அமைக்கப்பட்டது. தற்போது, தென்னிந்தியாவின் முக்கிய தொடர்வண்டி சந்திப்பாகவும், தென்னக இரயில்வேயின் தனிப் பெரும் மண்டலமாகவும் உருப்பெற்றுள்ளது.[2]
சிறப்பம்சங்கள்
குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
பொருட்களை சோதிக்கும் எந்திரம்
கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை (முதல் வகுப்பு பயணியருக்கு)
சரக்கு இரயில்களுக்கான தனி இருப்புப் பாதை
எளிதில் சென்றடையக்கூடிய டாக்ஸி, ஆட்டோ நிறுத்தம்
உடைமை பாதுகாப்பு அறை
ஊனமுற்றோர், முதியோருக்கான இலவச மின்கல ஊர்தி (சாமான்களுக்கு அனுமதியில்லை)
பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
வளர்ச்சியும் வளமையும்
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரயில்வே பாலம்
இந்தியாவின் சுறுசுறுப்பான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.
ஹவுரா, திருப்பதி, ஶ்ரீகங்கா நகர், ஜோத்பூர், மதுரை, எர்ணாகுளம், திருநெல்வேலி, வேளாங்கண்ணி, பெங்களூரூ, புனே, செங்கல்பட்டு, ஹைதராபாத் ஆகிய ஊர்களுக்கு இங்கே இருந்து விரைவு மற்றும் அதிவிரைவு இரயில்வண்டிகள் புறப்படுகின்றன.