யூரோப்பியம்(III) கார்பனேட்டு
யூரோப்பியம்(III) கார்பனேட்டு (Europium(III) carbonate) என்பது Eu2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்புஅம்மோனியம் கார்பனேட்டுடன் யூரோபியம்(III) குளோரைடைச் சேர்த்து இதன் நீரிய கரைசலை சூடாக்குவதன் மூலம் யூரோபியம்(III) கார்பனேட்டை தயாரிக்கலாம்.[2] ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் கார்பனேட்டு கரைசலின் வினையிலிருந்து பெறப்பட்ட ஒரு நிறைவுற்ற கார்பன் டை ஆக்சைடு அம்மோனியம் கார்பனேட்டு கரைசலும் யூரோப்பியம் உப்புக் கரைசலுடன் வினைபுரிந்து யூரோப்பியம் கார்பனேட்டைக் கொடுக்கும்.[3] யூரோப்பியம்(III) அசிடேட்டின் வெப்ப சிதைவு வினையும்,[4] நீரில் கரைக்கப்பட்ட யூரோபியம்(III) ஆக்சைடுடன் மீவெப்ப கார்பன் டை ஆக்சைடின் வினை[5] ஆகியவையும் இதர தயாரிப்பு முறைகளாகும். வேதிப் பண்புகள்யூரோப்பியம்(III) கார்பனேட்டு அமிலத்தில் கரைந்து கார்பனீராக்சைடைக் கொடுக்கிறது:[1]
உயர் வெப்பநிலையில் யூரோப்பியம்(III) கார்பனேட்டு சிதைவுக்கு உள்ளாகி யூரோப்பியம்(III) ஆக்சைடாக மாறுகிறது:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia