ரன் என்பது சன் தொலைக்காட்சியில் 5 ஆகத்து 2019 முதல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, செப்டம்பர் 16, 2019 ஆம் ஆண்டு முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான திரில்லர் காதல் மற்றும் மருத்துவம் நிறைந்த தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடரை விகடன் ஒளித்திரை என்ற நிறுவனம் தயாரிக்க,[1] பிரபல இயக்குநர் செல்வா மற்றும் கே. ராஜீவ் பிரசாந்த் ஆகியோர் தொடரை இயக்கியுள்ளனர்.
தெய்வமகள் புகழ் கிருஷ்ணா என்பவர் சக்தி என்ற கதாபாத்திரத்திலும் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் புகழ் சரண்யா என்பவர் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அத்தியாயம் 87 முதல் இவருக்குப் பதிலாக நடிகை சாயா சிங் என்பவர் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர்களுடன் நிழல்கள் ரவி, அஸ்வந்த் திலக், ஸ்ரீ துர்கா, நவ்யா சுவாமி, சசிகலா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] இந்தத் தொடர் மார்ச் 31, 2020 ஆம் ஆண்டு 197 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.
இந்த தொடர் முதலில் ஆகத்து 5, 2019 முதல் செப்டம்பர் 14, 2019 ஆம் ஆண்டு வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. தற்பொழுது இந்த தொடர் செப்டம்பர் 16, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பானது.