ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு (Rhodium(II) trifluoroacetate) என்பது Rh2(O2CCF3)4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். ரோடியம்(II) டிரைபுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. சில கரிமத் தொகுப்பு வினைகளில் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு மற்றும் இதன் வழிப்பெறுதிகள் எக்சுகதிர் படிகவியல் மூலம் விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல ஈருலோக கார்பாக்சிலேட்டு அணைவுகளில் காணப்படும் சீன விளக்கு கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்றுக்கொள்கிறது. இந்த கட்டமைப்பு Rh-Rh பிணைப்புக்கு இடமளிக்கிறது. இதன் இருப்பு இந்த Rh(II) இனத்தின் காந்தத்தன்மையை விளக்குகிறது. Rh-Rh பிணைப்பு இடைவெளி 238 பைக்கோமீட்டர் ஆகும்.[2]
நீரற்ற இந்த அணைவுச் சேர்மம் பச்சை நிறத்துடன் ஆவியாகும் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. ரோடியம்(II) அசிடேட்டை சூடான முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.:[3]
இந்த வினை அசிட்டிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. Rh-Rh பிணைப்பு தக்கவைக்கப்படுகிறது.
வினைகள்
ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு பலவகையான லூயிசு காரங்களுடன் பெரும்பாலும் 2:1 விகிதாச்சார அளவுகளில் வினைபுரிந்து கூட்டுவிளைபொருள்களை உருவாக்குகிறது. இரண்டு Rh(II) மையங்களில் ஒவ்வொன்றிலும் "அச்சு" நிலைகளில் காரங்கள் பிணைக்கப்படுகின்றன:
ரோடியம்(II) அசிடேட்டைக் காட்டிலும் ரோடியம்(II) முப்புளோரோ அசிட்டேட்டு மிகவும் பலவீனமான காரங்களுடன் கூட பிணைகிறது. அறுமெத்தில்பென்சீன் மற்றும் எண்கந்தகத்துடன் கூட்டு விளைபொருளை உருவாக்குகிறது.[4]
↑ 1.01.1Doyle, Michael P.; Davies, Huw M. L.; Manning, James R.; Yu, Yang (2018). "Dirhodium(II) tetrakis(trifluoroacetate)". EEROS. doi:10.1002/047084289X.rd461.pub2.
↑Felthouse, Timothy R. (1982). "The Chemistry, Structure, and Metal-Metal Bonding in Compounds of Rhodium(II)". Progress in Inorganic Chemistry. Vol. 29. pp. 73–166. doi:10.1002/9780470166307.ch2. ISBN978-0-471-09370-1.
↑Cotton, F. Albert; Dikarev, Evgeny V.; Petrukhina, Marina A. (2001). "Neutral Cyclooctasulfur as a Polydentate Ligand: Supramolecular Structures of [Rh2(O2CCF3)4]n(S8)m (N:m=1:1, 3:2)". Angewandte Chemie International Edition40 (8): 1521–1523. doi:10.1002/1521-3773(20010417)40:8<1521::AID-ANIE1521>3.0.CO;2-M.