காப்புரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு - Creative Commons License
செயற்பயிற்சி: படங்கள் எடுத்தல், வாய்மொழி வரலாறு பதிவுசெய்தல்
தேனீர் இடைவேளை: 3:30 - 3:45
எண்ணிம கற்றல் வளங்கள் (3:45 -5:00)
SERVE Foundation அறிமுகம்
எண்ணிம கற்றல் வளங்கள் - செந்தில்
தானே கற்றல் ஊடாட்டல் மென்பொருள் (Self-learning Interactive Software) செயற்காட்சி - செந்தில்
கள ஆவணப்படுத்தல்/கலந்துரையாடல் (இடை வேளையிலும் இது முன்னெடுக்கப்படலாம்)
செயற்பயிற்சி: ஹட்டன் இல் கள ஆவணப்படுத்தல் (வாய்ப்புக் கிடைத்தால்)
பட்டறை விபரம்
மலையக பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத் தலைவர் திரு.விஜயசுரேஷ் மற்றும் ஹட்டன் கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. துரைராசா ஆகியோரின் முன்னிலைப் பங்கேற்புடன் ஆரம்பமானது. சுமார் 36 பங்குபற்றுனர்கள் பங்கேற்றனர்.
ஆரம்ப செயலரங்கு ஒன்றுகூடல் அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ப.விஜயகாந்தன் நிகழ்வின் அறிமுகக் குறிப்பினை வழங்கினார். பங்குபற்றுனர்களின் கருத்துதிர்ப்புகளைத் தொடர்ந்து சஞ்சீவி சிவகுமார் விக்கிப்பீடியா, நூலகம் மற்றும் இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் குறித்த அறிமுகத்தை செய்தார். தொடர்ந்து சேவ் பவுண்டேசன் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு செந்தில் தமிழில் கிடைத்தகு கல்வி வளங்கள் குறித்த அறிமுகத்தை வழங்கினார்.
தொடர்ந்து கணினி அறையில் செயன்முறை பயிற்சி நடைபெற்றது. விக்கிப்பீடியாவில் கட்டுரை தொகுத்தல் பல்லூடக ஆவணங்களை தொகுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கணினி இணைப்பு பலவீனமாக இருந்தமையால் மெதுவாகவே நகர முடிந்தது. ஆவணகத்தில் தொகுப்பு செய்யப்படும் முறையும் விளக்கப்பட்டது. தொடர்ந்து இணையவழிக்கல்வி வளங்களின் தேடல் மற்றும் பயன்பாடுகள் பற்றி செந்தில் அவர்களின் செயன்முறைப் பயிற்சி இடம் பெற்றது. பதிப்புரிமை மற்றும் படைப்பாக்கப் பொதுமம் பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டன.
இணைய வழி கலந்துரையாடலின் பின்னர் ஆகஸ்ட் எட்டு, 2017 அன்று மலையகத்தில் பட்டறை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழு பங்கேற்பாளர்கள் பட்டியைல தாயாரித்தது. பட்டறை நடத்துவதற்கான இடமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தினை சுப்பையா கமலதாசன் ஏற்பாடு செய்துதவினார்.