விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.
தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. அனைத்துப் பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பயனர்கள், அந்த நேர அளவு முழுவதும் பங்களிக்க வேண்டும் என்பது இல்லை; அவரவருக்கு உகந்த நேரத்தில் விருப்பமான அளவிற்கு பங்களிக்கலாம்.
2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
நோக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பு!
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பகுப்புகள் உதாரணம் மட்டுமே, இதில் இல்லாத தங்களுக்கு விருப்பமான கட்டுரைகளைத் தாராளமாக உருவாக்கலாம். கீழ்க்காணும் நான்கு பகுப்புகளில் இருந்து சுமார் 2000இற்கு அதிகமான கட்டுரைகளை உருவாக்கலாம். 1.கணிப்பிய வேதியியல் 2.எழுத்தாளர்கள் 3.அரசியல்வாதிகள் 4.பழங்கால இந்தியா
தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டுரைகளில் புதிய மாவட்டங்கள் குறித்த இற்றைப் பணிகளில் ஊராட்சி ஒன்றிய அடிப்படையில் சரிபார்த்தல். (சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி, வேலூர், நாகபட்டணம், விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன).
செப்டம்பர் 30 அன்று காலை 5.30 மணியிலிருந்து (இந்திய நேரம்) அக்டோபர் 1 அன்று காலை 6.30 மணிவரை (இந்திய நேரம்) சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு கீழ்க்காணும் விளக்கப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாரத்தான் ஆரம்பிக்கவிருக்கும் நேரத்திற்கு சற்று முன்பாகவே பயனர்கள் பங்களிக்கத் தொடங்குவர். நிறைவுறும் நேரத்தில் புதிய கட்டுரைகள் பதிப்பிடல் செய்யப்படும். இதனைக் கருத்திற்கொண்டு இரு அரை மணிநேரங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 25 மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய நேரம் என்பது UTC+05.30 என்பதுவும் ஒரு காரணமாகும்.