விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு
புதிய தானியங்கி இற்றைமுதற்பக்க பராமரிப்பாளர்களே, வார்ப்புரு:Mainpage v2 பக்கத்தை நாம் தொகுக்காமல் அப்படியே முதற்பக்கம் இற்றைப் படுத்த சூர்யபிரகாசும், யுவராஜ் பாண்டியனும் லுவா நிரல் மொழியைக் கொண்டு ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளனர். - Module:Main page. இதன் மூலம் mainpage v2 வைத் தொகுக்கத் தேவையில்லை. நாம் எப்போதும் உருவாக்கும் துணை வார்ப்புருகளை சரியான தேதி தலைப்பிட்டு உருவாக்கி வைத்து விட்டால் தானே இற்றையாகி விடும். இதற்கான மாதிரி mainpage v3 பக்கம் இதோ. இந்த முறையை நாம் பின்பற்றத் தொடங்கினால், முதற்பக்க பராமரிப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியன. 1) துணை வார்ப்புருக்களை கவனமாக உருவாக்க வேண்டும். எ.கா ஜூன் 23 தேதிக்கான வார்ப்புரு (உ.தா, கட்டுரை, சிறப்புப் படம்) ஏதாவது ஒன்றை உருவாக்கினால், அது காட்சிக்குத் தயாராகும் வரை {{underconstruction}} வார்ப்புரு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஜூன் 23 ஆம் தேதி {{underconstruction}} இல்லாமல் அப்படியொரு வார்ப்புரு இருப்பின் அது தானாக முதற்பக்கத்துக்குப் போய் விடும். எனவே முழுமையாகத் தயாராகும் வரை இவ்வார்ப்புருவினை நீக்க வேண்டாம் 2) தலைப்புகளில் மாதங்கள் பெயர்களில் தற்போது சீர்மை தேவைப் படுகிறது. மொழிபெயர்ப்பு விக்கியில் இருந்து மாதப் பெயர்கள் எடுக்கப்படுகின்றன. முன்பு பிற விக்கித் திட்டங்களில் முறிவு ஏற்பட்டதால், கிரந்தமற்ற, தமிழ் இலக்கணப்படியான பெயர்கள் (சனவரி, பெப்ரவரி, மார்ச்சு, ஏப்பிரல், சூன், சூலை, ஆகத்து, செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்) மொழிபெயர்ப்பு விக்கியில் மாற்றப்படவில்லை. எனவே தற்போது அங்கு (ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்) ஆகிய பெயர்களே உள்ளன. எனவே அங்கு முழுமையாக மாறும் வரை (அல்லது மாறினாலும்) இரண்டு வகைப் பெயர்களுக்கும் வழிமாற்று தந்து உருவாக்க வேண்டும். இது சிறிது வேலையை அதிகப்படுத்தினாலும் நமக்குப் பாதுகாப்பானது. புதிய மாத மாறிகள், நிரல் மாற்றம் ஏற்பட்டாலும் முறிவின்றி வழிமாற்றுகள் காப்பாற்றிவிடும். இவ்விரண்டையும் முதற்பக்க பராமரிப்பில் கடந்த மூன்றாண்டுகளாக ஈடுபட்டு வருவோரும் இனி ஈடுபட விரும்புவோர் அனைவரும் மனதில் கொண்டால் இந்த மாற்றத்தை செய்து விடலாம். நமக்கு வேலைப்பளு குறையும். இது குறித்து தங்கள் கருத்துகளை வேண்டுகிறேன். இணக்க முடிவேற்பட்டால் அடுத்த வாரம் மாற்றி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 06:08, 29 மே 2013 (UTC)
மிகவும் எச்சரிக்கையுடனேயே இத்திட்டத்தை வரவேற்கிறேன். பெரும்பாலானோர் (வழமையான பயனர்களை விட) முதலில் விக்கிக்கு வருவது முதற்பக்கத்தினூடாகவே. எனவே முதற்பக்கத்தில் எப்போதும் குளறுபடி இருக்கக்கூடாது. முதற்பக்க இணைப்புகள் அனைத்தும் முன்கூட்டியே குறைந்தது ஒரு மாதத்திற்கேனும் இற்றைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு சிறு தவறும் (அது ஒரு குறுகிய நேரம் என்றாலும்) நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எழுதப்படும் நிரல்கள் அனைத்து உலாவிகளிலும் (குறிப்பாக IE இல்) பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். தற்போது அண்மைய மாற்றங்களில் உள்ள நிரல்கள் IE இல் ஏற்றம் பெற வெகு சிரமமாக உள்ளது. இவற்றுடன் இரவி கூறிய கருத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 10:15, 30 மே 2013 (UTC)
முன்பக்க இற்றைப்படுத்தல் மேற்கொள்ளும் பயனர்தற்போது இற்றைப்படுத்தல் மேற்கொள்ளும் பயனர் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. ஏற்கெனே உள்ளவர்களோடு ஆர்வமுள்ளவர்களும் இணைந்து கொள்ளலாம். இற்றைப்படுத்தல் மேற்கொள்ளும் பயனர்கள் யார்யாரென உறுதியானதும், அவர்களே இற்றைப்படுத்தல் முன்னெடுக்கும் பொறுப்பாளிகள். மற்றப் பயனர் உதவலாம். மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவியுங்கள்.
--Anton·٠•●♥Talk♥●•٠· 02:53, 11 அக்டோபர் 2013 (UTC)
முதற்பக்க இற்றைக்குத் தன்னார்வலர்கள் தேவைபல மாதங்களாக முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப்படவில்லை :( இதைப் பொறுப்பேற்றுச் செய்ய தன்னார்வலர்கள் தேவை. --இரவி (பேச்சு) 07:48, 26 ஏப்ரல் 2019 (UTC)
முதற்பக்க இற்றைவணக்கம் @Sridhar G. சேலம் பயிற்சியின்போது முதற்பக்க இற்றை பற்றி கேட்டீர்கள். இந்தப் பக்கத்தில் அதைப் பற்றிய தகவல் உள்ளது. அண்மைய முதற்பக்கக் கட்டுரை, விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 2, 2025 என்ற பக்கத்தில் இருந்து காட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் காட்சிப்படுத்தவேண்டிய கட்டுரைகளுக்கான சிகப்பு இணைப்புப் பக்கங்கள் இங்கு உள்ளன. அதே பக்கத்தில் சரிபார்க்கப்பட்ட கட்டுரைகளும், சரிபார்க்கப்பட வேண்டிய பயனர் பரிந்துரைகளும் உள்ளன. எப்படிச் சரிபார்க்க வேண்டும் என்பதற்கே வரையறைகள், வழிகாட்டல்கள் அதே பக்கத்தில் உள்ளன. அவற்றைக் கவனித்து அடுத்தடுத்த வாரங்களுக்கான கட்டுரைகளை முன்கூட்டியே இட்டுவைக்கலாம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்தப் பணியைப் பொறுப்பெடுத்துக் கொள்ளலாம். - இரவி (பேச்சு) 07:33, 4 ஏப்ரல் 2025 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia