விஜய் குமார் பட்டோடி
விஜய் குமார் பட்டோடி (Vijay Kumar Patodi) (12 மார்ச் 1945 - 21 திசம்பர் 1976) ஓா் இந்திய கணிதவியலாளர் ஆவார். இவர் வேற்றுமைப்பாட்டு வடிவக் கணிதம் மற்றும் இடவியல் தொடர்பான அடிப்படை பங்களிப்புகளை செய்தார். நீள்வட்ட இயக்கிகளுக்கான குறியீட்டு தேற்றத்தின் ஆதாரத்திற்கு வெப்பச் சமன்பாடு முறைகளைப் பயன்படுத்திய முதல் கணிதவியலாளராக இருந்தார். இவர், மும்பையிலுள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியராக இருந்தார். கல்விபட்டோடி, மத்தியப் பிரதேசத்தின் குணா அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவராவாா். உஜ்ஜெயினில் உள் விக்ரம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். வாரணாசி இந்து பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றாா். மும்பை பல்கலைக்கழகத்தில் எம். எஸ். நரசிம்மன் மற்றும் எஸ். ரமணன் ஆகியோாின் மேற்பாா்வையில் தனது முனைவர் பட்டத்தை முடித்தாா்.[1][2] தனது முனைவர் பட்டத்திற்கான கட்டுரையிலிருந்து செய்தி இதழ்களுக்கு இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமா்ப்பித்து புகழ் பெற்றாா்.[3] ஆய்வுப் பணிஇவர், மேம்பட்ட கல்விக்கான நிறுவனத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டாா். அங்கு மைக்கேல் அதியா, இசதோர் சிங்கர் மற்றும் ராவ்ல் பாட் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். கூட்டுப் பணியின் விளைவாக அவா்கள் தொடர்ச்சியாக "Spectral Asymmetry and Riemannian Geometry" (Math. Proc. Cambridge. Phil. Soc.) ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா். அக்கட்டுரைகளில் η-மாறிலி வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது 1980 களில் இப்பிராந்தியத்தில் அடுத்தடுத்த முன்னேற்றங்களில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.[4][5] இறப்பு30 வயதில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் முழு நேரப் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார். எனினும் தனது 31 ஆவது வயதில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய சிக்கல்கள் காரணமாக இறந்தார். மேற்கோள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia