வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)
வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman (film)) (1959) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில்[சான்று தேவை] ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது. இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி மற்றும் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் ஆவார்.[1] இத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.[2] வகைநடிகர்கள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia