அங்கேரி மீதான முதல் மங்கோலியப் படையெடுப்புஅங்கேரி மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு என்பது 1241 மார்ச் மாதத்தில் ஆரம்பித்தது. 1242 மார்ச் மாதத்தின் கடைசிப்பகுதியில் மங்கோலியர்கள் பின்வாங்க ஆரம்பித்தனர். அங்கேரியர்கள் மங்கோலிய ஆபத்தைப் பற்றி முதன்முதலில் 1229ஆம் ஆண்டு அறிந்தனர். தப்பித்து வந்த சில உருசிய போயர்களுக்கு மன்னன் இரண்டாம் ஆண்ட்ரூ புகலிடம் வழங்கிய போது அவர்கள் இதை அறிந்து கொண்டனர். பன்னோனிய வடிநிலத்துக்கான முதன்மை புலம்பெயர்வின்போது சில மகியர்கள் (அங்கேரியர்கள்) பயணம் மேற்கொள்ளாமல் மேல் வோல்கா கரையிலேயே வாழ்ந்து வந்தனர். 1237ஆம் ஆண்டு ஒரு தொமினிக்க மத குருமாரான சூலியானஸ் அவர்களை மீண்டும் கூட்டி வதற்காக ஒரு பயணத்தை மேற்கொண்டார். அவர் மன்னன் பெலாவிடம் படு கானிடம் இருந்து ஒரு மடலுடன் திருப்பி அனுப்பப்பட்டு இருந்தார். அந்த மடலில் அங்கேரிய மன்னன் தன் இராச்சியத்தை எந்தவித நிபந்தனையின்றி தாதர் படைகளிடம் சரணடைய வைக்க வேண்டும் அல்லது முழுமையான அழிவை எதிர்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பெலா இந்த மடலுக்கு பதிலளிக்கவில்லை. மேலும் இரண்டு மாடல்கள் அங்கேரிக்கு வழங்கப்பட்டன. முதல் மடலானது 1239ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட குமன் பழங்குடியினர் அங்கேரியிடம் தஞ்சம் கேட்டு பெற்றபோது வழங்கப்பட்டது. இரண்டாவது மடலானது பெப்ரவரி 1241ஆம் ஆண்டு மற்றொரு மங்கோலியப் படையால் படையெடுப்பை எதிர்நோக்கி இருந்த போலந்தில் இருந்து வந்தது.[சான்று தேவை][1][2][3][4][5] குறிப்புகள்உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia