வால்டர் வெற்றிவேல்
வால்டர் வெற்றிவேல் பி. வாசுவின் இயக்கத்தில் 1993ஆவது ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சத்யராஜ், சுகன்யா, ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை நாளில் வெளியானது. 200நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம், தொண்ணூறுகளில் வெளியான சத்யராஜ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாகும்.[2][3][4] ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் எஸ். பி. பரசுராம் என தெலுங்கிலும், கோவிந்தாவின் நடிப்பில் குத்தார் என இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சத்திய்ராஜ் மற்றும் சுகண்யா ஆகியோர் சினிமா எக்சுபிரசு விருது பெற்றார்கள்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia