கறம்பக்குடி (ஆங்கிலம்:Karambakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பேரூராட்சி ஆகும். இது டெல்டா பகுதியில் உட்பட்டதாகும்.
அமைவிடம்
கறம்பக்குடி பேரூராட்சியானது, தஞ்சாவூர் 36 கி.மீ. , புதுக்கோட்டை 39 கி.மீ. , ஒரத்தநாடு 25 கி.மீ. ,பட்டுக்கோட்டை 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 49 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரவல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,352 வீடுகளும், 14,626 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°28′N 79°08′E / 10.47°N 79.13°E / 10.47; 79.13 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
பள்ளிகள்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனுமார் கோவில்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (செங்கமலம்)
- TELC (அரசு உதவி பெறும்) தொடக்கப் பள்ளி
- அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
- ரீனா மெர்சி ஆங்கிலப்பள்ளி
- குத்தூஸ் ஆங்கிலப்பள்ளி
- மகாத்மா காந்தி ஆங்கிலப்பள்ளி
- ப்ரைட் ஆங்கிலப்பள்ளி
வழிபாட்டு தலங்கள்
- ஆனந்தபுரீஸ்வரர் சிவன் திருக்கோயில்
- முத்துக்கருப்பையா கோயில்
- காசாம்பு நீலமேனி கருப்பையா கோயில் (சின்னக்கருப்பர் கோயில்)
- ஐயப்பன் கோயில்
- கற்பக விநாயகர் கோயில் (அக்ராஹாரம்)
- சந்தான ஆஞ்சநேய சுவாமி கோயில் (அக்ராஹாரம்)
- முருகன் கோயில் (புதுக்கோட்டை ரோடு)
- மங்கள விநாயகர் கோயில் (வள்ளுவர் திடல்)
- முனியாண்டவர் கோயில் (காவல் நிலையம்)
- மாரியம்மன் கோவில் (கண்டியன் தெரு)
- விநாயகர் கோயில் (செட்டி தெரு)
- திருமணஞ்சேரி அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில்
- ஜும்மா மசூதி (பெரிய பள்ளிவாசல்)
- மார்க்கெட் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- மஸ்ஜிதே ஹலிமா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- அத்தயைபா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- மேலப் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை
- அசெம்ப்ளீஸ் ஆப் காட் திருச்சபை
- கத்தோலிக்க திருச்சபை
- வீரமாகாளியம்மன் (அம்புக்கோவில்)
- காளியம்மன் கோவில் (அம்புக்கோவில்)
- மளையத்தம்மன் (அம்புக்கோவில்)
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்