ஆவுடையார்கோயில் வட்டம்

ஆவுடையார்கோயில்
ஆவுடையார்கோயில்
அமைவிடம்: ஆவுடையார்கோயில், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°04′19″N 79°02′31″E / 10.0720224°N 79.0420258°E / 10.0720224; 79.0420258
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் ஆவுடையார்கோயில்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஆவுடையார்கோயில் வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[4] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆவுடையார்கோயில் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் பொன்பெத்தி, மீமிசல், ஏம்பல், ஆவுடையார்கோயில் என 4 உள்வட்டங்களும், 96 வருவாய் கிராமங்களும் உள்ளன.[5] மேலும் இவ்வட்டடத்தில் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

சிறப்புகள்

இவ்வட்டத்தில் மாணிக்கவாசகர் சீரமைத்த, தேவாரப் பாடல் பெற்ற ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் சிவத்தலம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 87,250 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 43,759 ஆண்களும், 43,491 பெண்களும் உள்ளனர். 21,356 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.07% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9196 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 17,389 41 மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 77.58%, இசுலாமியர்கள் 12.5%, கிறித்தவர்கள் 9.84% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்
  5. ஆவுடையார்கோயில் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
  6. [https://www.censusindia.co.in/subdistrict/avudayarkoil-taluka-pudukkottai-tamil-nadu-5828 ஆவுடையார்கோயில் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya