ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சியும் ஆகும். ஆலங்குடி நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள வடகாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே கொத்தமங்கலத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது. நகராட்சியின் அமைப்பு3.09 ச.கி.மீ. பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4] புவியியல்இவ்வூரின் அமைவிடத்தின் புவியியல் ஆள்கூறுகள், 10°21′40″N 78°58′47″E / 10.3611°N 78.9796°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இதையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia