அலிபாடிக் சேர்மம்

வளையமற்ற அலிபாடிக் சேர்மம் ( பியூட்டேன் )
வளைய அலிபாடிக் / நறுமணமற்ற சேர்மம்( வளையபியூட்டேன் )

கரிம வேதியியலில், ஹைட்ரோகார்பன்களானவை (கார்பன் மற்றும் ஐதரசன் ஆகிய இரண்டு தனிமங்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவை) இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன: அவை அரோமேடிக் சேர்மங்கள் மற்றும் அலிபாடிக் சேர்மங்கள் அல்லது அரோமேடிக் அல்லாத சேர்மங்கள் என்பவையாகும். அலிபாடிக் சேர்மங்கள் வளைய சேர்மங்களாகவும் இருக்கலாம்; இருப்பினும், ஹூக்கலின் விதிக்குக் கீழ்ப்படிந்த பை பிணைப்புகளைக் கொண்ட ஐதரோகார்பன்கள் மாறாக அரோமேடிக் சேர்மங்களாகக் கருதப்படுகின்றன. [1] அலிபாடிக் சேர்மங்கள் எக்சேன் போன்ற நிறைவுற்ற சேர்மங்களாகவோ, அல்லது எக்சீன் மற்றும் எக்சைன் போன்ற நிறைவுறாத சேர்மங்களாகவோ இருக்கின்றன. திறந்த கரியணுத் தொடரைக் கொண்ட சேர்மங்கள் (நேராகவோ அல்லது கிளைத்ததாகவோ) எந்த வகையிலும் வளையங்களைக் கொண்டிருக்கவில்லை, இதனால் அவை அலிபாடிக் ஆகும்.

அமைப்பு

அலிபாடிக் சேர்மங்கள் நிறைவுற்றவையாக, ஒற்றை பிணைப்புகள் கொண்ட ஆல்க்கேன்களாக அல்லது நிறைவுறாதவையாக, இரட்டை பிணைப்புகள் கொண்ட ஆல்க்கீன்களாக அல்லது மூன்று பிணைப்புகள் கொண்ட ஆல்க்கைன்களாக இருக்கக் கூடும். ஐதரசனைத் தவிர, மற்ற கூறுகள் கரியணுத் தொடருடன் பிணைக்கப்பட முடியும். ஐதரசனைத் தவிர இதர மிகவும் பொதுவான தனிமங்கள் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கந்தகம் மற்றும் குளோரின் ஆகியவை ஆகும்.

மிகவும் எளிய அலிபாடிக் சேர்மம் மீத்தேன் (CH4) ஆகும்.

பண்புகள்

பெரும்பாலான அலிபாடிக் சேர்மங்கள் எளிதில் எரியக்கூடியவையாக உள்ளன. இதன் காரணமாக ஐதரோகார்பன்கள் எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன. அதாவது, பன்சன் சுடரடுப்புகளில் மீத்தேன் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) மற்றும் பற்றவைப்பில் எத்தீன் ( அசிட்டிலீன்) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

அலிபாடிக் சேர்மங்கள் அல்லது அரோமேடிக் தன்மையற்ற கரிமச்சேர்மங்களுக்கான எடுத்துக்காட்டுகள்

மிக முக்கியமான அலிபாடிக் சேர்மங்கள்:

  • n-, ஐசோ- மற்றும் வளைய- ஆல்க்கேன்கள் (நிறைவுற்ற ஐதரோகார்பன்கள்)
  • n-, ஐசோ- மற்றும் வளைய- ஆல்க்கேன்கள் மற்றும் - ஆல்க்கீன்கள் அல்லது ஆல்க்கைன்கள் (நிறைவுறா ஐதரோகார்பன்கள்).

குறைந்த மூலக்கூறு அலிபாடிக் சேர்மங்களின் முக்கிய எடுத்துக்காட்டுகள் கீழே உள்ள பட்டியலில் காணப்படுகின்றன (கார்பன்-அணுக்களின் எண்ணிக்கையால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது):

வேதி வாய்ப்பாடு பெயர் அமைப்பு வாய்ப்பாடு வேதியியல் வகைப்பாடு
CH4 மீத்தேன் ஆல்க்கேன்
C2H2 அசிட்டிலீன் ஆல்க்கைன்
C2H4 எத்திலீன் ஆல்க்கீன்
C2 H6 ஈத்தேன் ஆல்க்கேன்
C3H4 புரொப்பீன் ஆல்க்கைன்
C3H6 புரோப்பீன் ஆல்க்கீன்
C3H8 புரொப்பேன் ஆல்க்கேன்
C4 H6 1,2-பியூட்டாடையீன் டையீன்
C4H6 1-பியூட்டைன் ஆல்க்கைன்
C4H8 1-பியூட்டீன் ஆல்க்கீன்
C4H10 பியூட்டேன் ஆல்க்கேன்
C6 H10 வளையஎக்சீன் வளையஆல்க்கீன்
C5 H12 n -பென்டேன் ஆல்க்கேன்
C7H14 வளையயெப்டேன் வளையஆல்க்கேன்
C7 H14 மெதில்வளையஎக்சேன் வளையஆல்க்கேன்
C8H8 கியூபேன் ஆக்டேன்
C9 H20 நோனேன் ஆல்க்கேன்
C10 H12 இருவளையபென்டாடையீன் வளையஆல்க்கீன், டையீன்
C10H16 பெல்லாண்ட்ரீன் டெர்பீன், டையீன் வளையஆல்க்கீன்
C10H16 α- டெர்பினீன் டெர்பீன், வளையஆல்க்கீன், டையீன்
C10H16 லிமோனேன் டெர்பீன், டையீன், வளையஆல்க்கீன்
C11 H24 அன்டெகேன் ஆல்க்கேன்
C30 H50 ஸ்குவாலீன் டெர்பீன், ஆல்க்கீன்
C2nH4n பாலிஎதிலீன் பலபடி ஆல்க்கீன்

குறிப்புகள்

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம் (1995). "aliphatic compounds". Compendium of Chemical Terminology Internet edition.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya