அலுமினியம் சிட்ரேட்டை எண்ணெய் தொழிற் துறையில் பல பலபடிகளுக்கு குறுக்கு இணைப்பாகப் பயன்படுத்தலாம்.[2] வியர்வை எதிர்ப்பு மருந்தாகவும் இது பயன்படுகிறது.
விளைவுகள்
கால்சியம் சிட்ரேட்டு (Ca2+) அயனியை இடப்பெயர்ச்சி செய்யும் Al3+ அயனிகளின் திறனின் காரணமாக அலுமினியம் சிட்ரேட்டு இரத்தத்தில் சுமார் 8% அலுமினியத்தை எடுத்துக்கொள்கிறது.[3] இதனால் சிறுநீரகங்களில்பாசுபரசின் அதிகரிப்பு ஏற்படுவதால் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது.[4] அல்சைமர் நோயை உண்டாக்கும் என சந்தேகிக்கப்படுகிறது என்றாலும் கூடுதல் சான்றுகள் தேவை காரணமாக உறுதிப்படவில்லை.[5] சிலிகோசிசு நோயை தடுப்பது போன்ற சில நேர்மறையான விளைவுகளையும் மனிதர்களுக்கு இது அளிக்கிறது. ஒருவேளை இதை உட்கொண்டால், 80% சேர்மம் சிறுநீர் மூலம் உடல் வழியாக வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ளவையும் மெதுவாக வெளியேறும்.[6]
அலுமினியம் சிட்ரேட்டு அணைவுகள்
அம்மோனியம் அலுமினியம் சிட்ரேட்டு ((NH4)4Al3C6H4O7(OH)(H2O)) போன்ற அணைவுச் சேர்மங்களை அலுமினியம் சிட்ரேட்டு உருவாக்கும். அலுமினியம் நைட்ரேட்டு நோனா நீரேற்று, சிட்ரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் ஐதராக்சைடு ஆகியவற்றைக் கலந்து இதை உருவாக்கலாம்.[7]
மேற்கோள்கள்
↑Fraga, A.K.; Oliveira, P.F.; Dores, F.G.L. (2020). "Synthesis and characterization of aluminium citrate compounds and evaluation of their influence on the formation of hydrogels based on polyacrylamide" (in English). Iranian Polymer Journal29 (8): 649–657. doi:10.1007/s13726-020-00825-5.
↑Johannes Fink (2003). Oil Field Chemicals. Gulf Professional Publishing. p. 116. ISBN0-08-049757-8.
↑A.J. Downs (1993). Downs, A.J. (ed.). Chemistry of Aluminium, Gallium, Indium and Thallium (in English). Springer Netherlands. p. 485. ISBN9780751401035.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
↑KennethAbreo (2001). "Chapter 2 - Aluminum-Induced Bone Disease: Implications for Alzheimer's Disease" (in English). Aluminium and Alzheimer's Disease (Springer link) 2. doi:10.1016/B978-044450811-9/50027-6.
↑Kui Wang (1989). Silica Induced Cell Damage and the Protective Effect of Aluminum Cimplexes (in English). Institute of Advanced Studies, University of Malaya.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
↑Timothy L. Feng; Patrick L. Gurian; Matthew D. Healy; Andrew R. Barron (1990). "Aluminum citrate: isolation and structural characterization of a stable trinuclear complex" (in English). Inorg. Chem.29 (3): 408–441. doi:10.1021/ic00328a013.