அலுமினியம் சல்பசிட்டேட்டுஅலுமினியம் சல்பசிட்டேட்டு (Aluminium sulfacetate) என்பது Al2SO4(CH3CO2)4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும் [1][2]. பயன்கள்இது அலுமினியம் சல்பேட்டு மற்றும் அலுமினியம் அசிட்டேட்டு ஆகிய இரண்டு சேர்மங்களின் இரட்டை உப்பு ஆகும். நிறம் ஊன்றியாக . நெய்யப்பட்ட துணிகளின் மீது சாயத்தை ஊன்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது [3]. குறிப்பாக இரும்பு, அலுமினியம் போன்ற பல்லிணைதிற உலோக அயனிகளை இது கொண்டுள்ளது [4]. கார அலுமினியம் ஈரசிட்டேட்டு அல்லது அலுமினியம் சல்பசிட்டேட்டு, ஆகியவற்றின் கலவை பருத்தி, செல்லுலோசு இழை மற்றும் பட்டு ஆகியவற்ரின் மீது பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் மூவசிட்டேட்டு அலிசாரின் சாயங்களுடன் சேர்க்கப்பட்டு நிற்ம் ஊன்றும் முகவராகப் பயன்படுகிறது [1] தார் மணம் கொண்ட நீர்மங்களான தூய்மையற்ற சல்பசிட்டேட்டு சேர்மத்தை தடைசெய்து தூய்மையான சல்பசிட்டேட்டு சேர்மத்தை தயாரிக்க வேண்டும் என 1989 ஆம் ஆண்டில் கான்சுவிண்ட்டு பரிந்துரைத்தார்[5]. எம்பைரியூமா என்ற வேதியியல் மற்றும் மருத்துவச் சொல் வழக்கற்றுப் போனது. இச்சொல்லின் பொருள் தாவர மற்றும் விலங்குகளை எரிக்கும்போது உண்டாகும் மணம் மற்றும் சுவையுடன் தொடர்புடைய தார்மணம் என்பதைக் குறிக்கிறது[6]. இந்நிறமூன்றியைத் தயாரிக்கும் போதும் பைரோலிக்னியசு அமிலம் எனப்படும் மர அமிலத்தைப் பயன்படுத்துவதால் இத்தகைய மணம் தோன்றுகிறது[5]. தயாரிப்புஅலுமினியம் சல்பேட்டையும் ஈய(II) அசிட்டேட்டையும் சேர்த்து வினைபுரியச் செய்து அலுமினியம் சல்பசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் இப்பகுதிப்பொருள்களின் அளவு உருவாகும் கலவையின் பகுதிப்பொருள்களை கட்டுப்படுத்துகிறது[1]. இப்பகுதிப் பொருட்களின் விகிதவியல் விகிதம் 3:1 என்ற அளவைத் தாண்டும் போது வினை செயல்முறையானது ஒட்டுமொத்தமாக அலுமினியம் மூவசிட்டேட்டு உருவாக்கத்தை நோக்கி நகர்கிறது. ஈய அசிட்டேட்டின் அளவு குறையும்போது அலுமினியம் மூவசிட்டேட்டும் அலுமினியம் சல்பசிட்டேட்டும் கலவையாக உருவாகின்றன. அலுமினியம் சல்பசிட்டேட்டின் அளவு அதிகரித்து வினைப்பொருளின் மோல் விகிதம் 2:1 என்ற அளவை நோக்கி நகர்கிறது. நிறம் ஊன்றும் செயலுக்குத் தேவையான பல்வேறு வகை கலவைகளைத் தயாரிக்க இப்பண்பு பெரிதும் உதவுகிறது:[1]
அசிட்டேட்டு அயனிகளை இடப்பெயர்ச்சி செய்து ஐதராக்சைடு அயனிகளை இடம்பெறச் செய்து Al2SO4(CH3CO2)4 - n(OH)n, என்ற கார அலுமினியம் சல்பசிட்டேட்டையும் தயாரிக்க முடியும். (n = 0) எனில் அலுமினியம் சல்பசிட்டேட்டும் (n = 4) எனில் அலுமினியம் சல்பேட்டு மற்றும் அலுமினியம் ஐதராக்சைடுகளின் இரட்டை உப்பும் (Al2SO4(OH)4) இறுதியாக விளைகின்றன. அலுமினியம் சல்பேட்டின் நீரேற்றுகள் மற்றும் ஈய அசிட்டேட்டுகளிலிருந்தும் அலுமினியம் சல்பசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது:[2]
n = 1 மற்றும் n = 2 ஆக உள்ள நிகழ்வுகளில் உரிய வினைப்பொருளுடன் சோடியம் பைகார்பனேட்டை உபயோகித்து கார அலுமினியம் சல்பசிட்டேட்டுகள் உருவாக்கப்படுகின்றன:[2].
n = 3 ஆக உள்ள நிகழ்வுகளில் ஈய அசிட்டேட்டுக்குப் பதிலாக சோடியம் பைகார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலத்தைப் பயன்படுத்தி கார அலுமினியம் சல்பசிட்டேட்டே தயாரிக்கப்படுகிறது [2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia