அலுமினியம் புளோரைடு(Aluminium fluoride) என்பது AlF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மம் ஆகும். அலுமினியம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவது இச்சேர்மத்தின் முதன்மையான பயனாகும். நிறமற்ற திண்மமான இதை செயற்கை முறையிலும் தயாரிக்கலாம். இயற்கையில் இது ரோசன்பெர்கைட்டு மற்றும் ஆசுக்கர்சோனைட்டு என்ற கனிமங்களில் தோன்றுகிறது.
அமோனியம் எக்சாபுளோரோ அலுமினேட்டை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி அலுமினியம் புளோரைடைத் தயாரிப்பது மற்றொரு மாற்று வழிமுறையாகும்[11]. சிறிய அளவு ஆய்வகத்தயாரிப்புகளுக்கு அலுமினியம் ஐதராக்சைடு அல்லது அலுமினியம் உலோகத்தை ஐதரசன் புளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தி இதைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.
அலுமினியம் புளோரைடு டிரையைதரைடு என்பது அரிதாக இயற்கையில் தோன்றும் ரோசன்பெர்கைட்டு என்ற கனிமமாகும். இதனுடைய நீரேற்றமற்ற வடிவம் ஆசுக்கர்சோனைட்டு என்ற கனிம வடிவில் தோன்றுகிறது[12].
கட்டமைப்பு
அலுமினியம் புளோரைடின் கட்டமைப்பு இரேனியம் டிரையாக்சைடு கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டு உருக்குலைந்த AlF6 எண்முகத் தோற்றத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு புளோரைடு அணுவும் இரண்டு Al மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முப்பரிமாண பல்பகுதித் தோற்றம் காரணமாக ALF3 உயர் உருகுநிலையயைப் பெற்றுள்ளது. திண்ம நிலையில் காணப்படும் அலுமினியத்தின் மற்ற டிரையாலைடுகள் வேறுபடுகின்றன.
AlCl3 ஓர் அடுக்கு கட்டமைப்பையும் மற்றும் AlBr3 மற்றும் AlI3 ஆகியவை மூலக்கூற்று இருபடிக் கட்டமைப்பையும் ஏற்கின்றன[13]. இதனால் இவை குறைந்த உருகுநிலையைப் கொண்டிருக்கின்றன. மேலும் இவை உடனடியாக ஆவியாகி இருபடிகளைக் கொடுக்கின்றன[14]. வாயு நிலையில் அலுமினியம் புளோரைடு முக்கோண மூலக்கூறுகளாக உள்ள D3h சமச்சீருடன் காணப்படுகிறது. வாயு மூலக்கூறுகளின் AL-F பிணைப்பின் பிணைப்பு நீளம் 163 பைக்கோமீட்டர்களாகும்.
பெரும்பாலான வாயுநிலை உலோக புளோரைடுகள் போல AlF3 ஆவியாகும் போது சமதள கட்டமைப்பை ஏற்கிறது
.
பயன்பாடுகள்
மின்னாற்பகுப்பு முறையில் அலுமினியத்தை உற்பத்தி செய்வதற்கு அலுமினியம் புளோரைடு ஒரு முக்கியமான கூட்டுசேர் பொருளாகப் பயன்படுகிறது. கிரையோலைட்டு தாதுவுடன் சேர்ந்து, இது உருகு நிலையை 1000 ° செல்சியசு வெப்பநிலை அளவுக்குக் குறைக்கிறது மற்றும் கரைசல்களின் கடத்துத்திறனையும் அதிகரிக்கிறது. இது உருகிய அலுமினிய ஆக்சைடில் கரைந்து பின்னர் மின்னாற்பகுப்பின் போது அலுமினியம் உலோகத்தை வழங்குகிறது.
உயிரியலில் அலுமினியம் புளோரைடு அணைவுச்சேர்மங்கள் பாசுப்போரைல் பரிமாற்ற வினைகளின் இயக்கவியல் அம்சங்களை ஆய்வுசெய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, இவை அடினோசின் டிரை பாசுப்பேட்டு, மற்றும் குவானோசின் டிரை பாசுப்பேட்டு போன்ற உயிரணுக்களின் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, வேறுபடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் இந்த உயிரணுக்கள் முக்கியமாக பங்களிக்கின்றன[15] பல்லினமுப்படி குவானின் நியூக்ளியோடைடு பிணைப்பு புரதங்களுடன் பிணையவும் அவற்றை செயலூக்கவும் அலுமினியம் புளோரைடு பயன்படுகிறது. இப்புரதங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கும், அவற்றின் முப்பரிமாண கட்டமைப்புகளையும் உயிர்வேதியியல் நுட்பத்தையும் புரிந்து கொள்ளவும் தெளிவுபடுத்தவும் இச்சேர்மம் பயன்படுகிறது[16].
முக்கியப் பயன்கள்
சிர்க்கோனியம் புளோரைடுடன் அலுமினியம் புளோரைடைச் சேர்த்து ஒரு பகுதிப்பொருளாக புளோரோ அலுமினேட்டு கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். நொதித்தலைத் தடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. மக்னீசியம் புளோரைடைப் போல இதை குறை அட்டவணை ஒளியியல் மென்படலமாக குறிப்பாக புற ஊதாக்கதிர் வெளிப்படுந்தன்மை தேவையான நேரத்தில் பயன்படுத்துகிறார்கள். இதற்காக ஆவிப்படிவு முறையில் இது படிவாக்கப்படுகிறது
பாதுகாப்பு
விலங்குகளுக்கு அலுமினியம் புளோரைடு வாய்வழியாகக் கொடுக்கப்படும் போது அதன் உயிர்க்கொள்ளும் அளவு (LD50) 0.1 கிராம் / கிலோகிராம் ஆகும் [17]. மீண்டும் மீண்டும் அல்லது நீடித்த உள்ளிழுத்தல் காசநோயை ஏற்படுத்தக்கூடும், மேலும் இதனால் எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்திலும் கூட தீய விளைவுகள் ஏற்பட்டு எலும்புகளில் மாற்றங்கள் மற்றும் நரம்பு மண்டல குறைபாடுகள் தோன்றலாம் [18].
அலுமினியம் புளோரைடு அணைவுச் சேர்மங்களாக உருவாவதுதான் இப்புளோரைடின் பெரும்பாலான நரம்பியல்நச்சு விளைவுகளுக்கு காரணமாகும். இந்த அணைவுச் சேர்மங்கள் பாசுப்பேட்டுகளின் வேதியியல் கட்டமைப்பு போல செயல்படுகின்றன. இதனால் அடினோசின் டிரை பாசுப்பேட்டு பாசுப்போ ஐதரோலேசு மற்றும் பாசுப்போலிப்பேசு டி ஆகியவற்றின் செயல்பாடுகளில் தாக்கத்தை உண்டாக்குகின்றன. மைரோமோலார் அளவுகளில் அலுமினியம் கிடைத்தால் கூட அலுமினியம் புளோரைடு உருவாகும் [19].
தொழிற்சாலைகளில் அலுமினியம் ஒடுக்கும் செயல்முறைகளின் போது அலுமினியம் புளோரைடு உமிழ்வு பாதிப்பு மனிதர்களுக்கு உண்டாகிறது [20]. அல்லது புளோரைடு மூலம் குடிநீர் வழியாக உடலுக்குள் நேரடியாகச் செல்வதன் மூலம் அல்லது பூச்சிக் கொல்லிகள் பயன்பாட்டில் எஞ்சியிருக்கும் மிச்சங்கள் போன்ற நடவடிக்கைகளும் இச்சேர்மத்தை மனித உடலுக்குள் செலுத்துகின்றன. குடிநீர், தேநீர், உணவு எச்சங்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தயாரிப்பு நுணுக்கங்கள், அலுமினியம்அடங்கிய அமிலங்கள் அல்லது மருந்துகள், மணம் நீக்கும் பொருட்கள், ஒப்பனை மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை அலுமினியத்தை மனிதனுக்குள் வெளிப்படுத்தும் ஆதாரங்கள் ஆகும். தண்ணீரில் காணப்படும் அலுமினிய வகைகளின் நீடித்த வெளிப்பாடு ஏற்படுத்தும் நரம்பியல் விளைவுகளை பற்றிய தகவல்கள் குறைவாக உள்ளன [21].
மேற்கோள்கள்
↑ 1.01.1Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.45. ISBN1439855110.
↑Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.131. ISBN1439855110.
↑"Aluminum Fluoride". PubChem. National Institute of Health. Retrieved October 12, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
↑"ALUMINUM FLUORIDE, CASRN: 7784-18-1". National Library of Medicine HSDB Database. CDC.gov. June 24, 2005. Retrieved October 12, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
↑TOXICOLOGICAL PROFILE FOR FLUORIDES, HYDROGEN FLUORIDE, AND FLUORINE. https://www.atsdr.cdc.gov/toxprofiles/tp11.pdf: U.S. DEPARTMENT OF HEALTH AND HUMAN SERVICES Public Health Service Agency for Toxic Substances and Disease Registry. 2003. p. 211. {{cite book}}: External link in |location= (help)CS1 maint: location (link)