அலுமினியம் போரோவைதரைடு(Aluminium borohydride) என்பது Al(BH4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் டெட்ரா ஐதரோபோரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உடனடியாகத் தீப்பற்றும் சேர்மமாகவும் உள்ள இச்சேர்மம் இராக்கெட் எரிபொருளாகவும், ஆய்வகங்களில் ஒடுக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான உலோக போரோ ஐதரைடுகள் போல இல்லாமல் அலுமினியம் போரோவைதரைடு ஒரு சகப்பிணைப்புச் சேர்மமாகும். மற்றவை அயனிப் பிணைப்புக் கட்டமைப்பில் உள்ளன[2][3].
தயாரிப்பு
சோடியம் போரோவைதரைடு உடன் அலுமினியம் குளோரைடு வினை புரிவதால் அலுமினியம் போரோவைதரைடு உருவாகிறது:[4].
3 NaBH4 + AlCl3 → Al(BH4)3 + 3 NaCl
அல்லது ஒர் உடன் தீப்பற்றாத டெட்ரா ஐதரோபியுரான் கூட்டு விளைபொருளாக,டெட்ரா ஐதரோபியுரானில் உள்ள அலுமினியம் குளோரைடு மற்றும் கால்சியம் போரோவைதரைடுடன் ஒத்த வினையில் ஈடுபடுகிறது:[2].
3 Ca(BH4)2 + 2 AlCl3 → 3 CaCl2 + 2 Al(BH4)3
வினைகள்
எல்லா போரோவைதரைடுகளையும் போல இச்சேர்மம் ஒரு ஒடுக்கும் முகவராகவும் ஐதரைடு வழங்கியாகவும் செயல்படுகிறது. தண்ணீருடன் வினைபுரிந்து தனிமநிலை ஐதரசன் வாயுவைக் கொடுக்கிறது. மேலும் கார்பாக்சிலிக் எசுத்தர்கள், ஆல்டிகைடுகள், கீட்டோன்கள் ஆகியனவற்றை ஒடுக்கி ஆல்ககாலாக மாற்றுகிறது.
↑ 2.02.1J. Kollonitsch & O. Fuchs (1955). "Preparation of Aluminium Borohydride and its Applications in Organic Reductions". Nature176 (4492): 1081. doi:10.1038/1761081a0.
↑Miwa, K.; Ohba, N.; Towata, S.; Nakamori, Y.; Züttel, A.; Orimo, S. (2007). "First-principles study on thermodynamical stability of metal borohydrides: Aluminum borohydride Al(BH4)3". J. Alloys Compd.446–447: 310–314. doi:10.1016/j.jallcom.2006.11.140.