ஆரையம்பதி கந்தசுவாமி கோவில்
கந்தசுவாமி கோயில் (முருகன்) இலங்கையின் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் ஆகும். ஆரையம்பதி கிராமத்தில் பெரிய கோயில் என்ற சிறப்பு பெயரால் இக் கோயில் அழைக்கப்படுகிறது. வரலாறு16 ஆம் நுாற்றாண்டின் முற்பகுதியில் காத்தான் என்ற வேடுவத்தலைவன்[1] வழிபட்ட வேல் முகுர்த்தம் கொண்டு உருவான கோயில். கோயில் குளத்தில் அமைந்திருந்த காசிலிங்கேஸ்வரர் கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரையம்பதிக்கு இடம்பெயர்ந்து காத்தானின் வேல் முகூர்த்தத்தை மூலவராக கொண்டும் காசிலிங்கேஸ்வரர் கோயிலின் சிதைவுகளை கொண்டும் பெரிய அளவில் கட்டுவிக்கப்பட்ட கோயில். திருவிழாக்கள்புரட்டாதி மகோற்சவம்புரட்டாதி பூரணைக்கு முன்வரும் பத்து தினங்கள் கொண்டு மகோற்சவம் இடம்பெறும். இங்கு ஒவ்வெரு திருவிழாவையும் உபயம் செய்பவர்களை ”பாகைக்காரர்கள்” என அழைப்பார்கள்.
கந்தசஷ்டி விரதம்முருகனுக்கே உரித்தான கந்தசஷ்டி விரதம் ஆறுநாட்கள் அனுஷ்டிக்கப்பட்டு இறுதி நாள் சூரன் போர் இடம்பெறும். பின்னர் திருக்கல்யாண உற்சவம் இடம்பெறும். இவ் விரத உற்சவத்தை “ஆறுகாட்டி குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். குமாராலய தீபம்கார்த்திகை குமாராலய தீப உற்சவம் இடம்பெறும். இவ் உற்சவத்தை “மன்றுளாடி குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். திருவாதிரைநடேசருக்கு சபையில் மார்கழி திருவாதிரை உற்சவம் பத்து நாட்கள் இடம்பெற்று இறுதியில் சமுத்திர தீர்த்தமும் அதன் பின்னர் பொன்னுாஞ்சல் திருவிழாவும் இடம்பெறும். இவ் உற்சவத்தை “பாலசிங்க ரெட்ண குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். தைப்பூசம்தைப்பூச உற்சவம் இடம்பெற்று மறுநாள் சமுத்திர தீர்த்தம் நடைபெறும். இவ் உற்சவத்தை “புலவனார் குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். மாசி மகம்மாசி மகத் திதியில் நடேசருக்கு உற்சவம் இடம்பெற்று மறுநாள் சமுத்திர தீர்த்தமும் அன்னதானமும் இடம்பெறும். இவ் உற்சவத்தை “வங்காள குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். பங்குனி உத்திரம்முத்துக்குமார சுவாமிக்கு பங்குனி உத்திர தினத்தில் உற்சவம் இடம் பெற்று சமுத்திரதீர்த்தம் அதனை தொடர்ந்து அன்னதானம் இம்பெறும். இவ் உற்சவத்தை “முதலித்தேவன் குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். சித்திரை சித்திரைமுத்துக்குமார சுவாமிக்கு உற்சவம் இடம்பெற்று. சமுத்திர தீர்த்தமும் சித்திரைகஞ்சி பிரசாதமும் இடம்பெறும். இவ் உற்சவத்தை “வீரமாணிக்கன் குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். ஆனி உத்திரம்நடேசருக்கு உற்சவம் இடம்பெற்று சமுத்திர தீர்த்தம் நடைபெறும். உற்சவத்தை “திருவிளங்கு குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். ஆடிப்பூரம்அம்மனுக்கு உற்சவம் இடம்பெற்று சமுத்திர தீர்த்தம் நடைபெறும். உற்சவத்தை “பத்தினியாச்சி குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். ஆவணி மூலம்நடேசருக்கு உற்சவம் இடம்பெற்று சமுத்திர தீர்த்தம் நடைபெறும். உற்சவத்தை “அலறித்தேவன் குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர். ஏனைய உற்சவங்கள்
தான்தோன்றிஸ்வரர் ஆலய தொடர்புகள்கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்கும் இவ் கோயிலுக்கும் இடையிலான பாரம்பரியமான தொடர்புகள் காணப்படுகின்றன.
இவ் நடைமுறைகள் மகோன் வகுத்த நியதிப்படி நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பில் சாதி அமைப்பில் முக்குகர் மற்றும் குருகுலத்தோர் ஆகிய சாதிகளுக்கு இடையிலேனா பரஸ்பர உறவுகளுக்கான சம்பிர்தாயம் என கருதப்படுகின்றது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia