கரையார்
கரையார் (Karaiyar) அல்லது குருகுலம் எனப்படுவோர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு சாதியாகும். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள், பண்டைய காலங்களில் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.[1][2] பெரும்பாலும் கடல் சார்ந்த தொழிலான மீன் பிடித்தலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைவிட கப்பல் கட்டி அதன் மூலம் நாடு பல கண்ட மாலுமிகளாகவும் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.[3] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோடியும் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தச் சாதியைச் சேர்ந்தவர்.[3][4] வரலாறுபுறநானூறு போன்ற பல பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. வையாபாடல் மற்றும் யாழ்ப்பாண வைபவமாலை போன்ற இலக்கியங்களில், இவர்கள் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது.[5] "முக்கரா ஹாட்டான" என்கிற ஒரு சிங்கள ஓலைச் சுவடியில், குருகுல வீரர்கள் முக்குவர்கலும் மற்றும் சோனகர்கலும் ஒரு மூன்று மாத போரில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடுகிறது.[6] இந்த போரில், குருகுல மாணிக்கத் தலைவன் என்கிற ஒரு குடித்தலைவர் இந்த போரில் இறந்துவிட்டார். இதன் காரணமாக ஆறாவது பராக்கிரமபாகு, குருகுல மாணிக்கத் தலைவனின் மகன் செண்பகப் பெருமாள் என்பவரைத் தத்தெடுத்தார்.[7][8] உட் சாதிப் பிரிவுகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia