ஆறாம் அட்டவணை, இந்திய அரசியலமைப்புஇந்திய அரசியலமைப்பில் ஆறாம் அட்டவணை, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, 1949-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சபையால் நிறைவேற்றப்பட்டது. இந்த அட்டவணையின் படி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் பகுதிகளில் வாழும் பெரும்பான்மை மலைவாழ் பழங்குடி மக்களின் மொழி, பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம், வாழிடப் பகுதிகள் ஆகிய உரிமைகளைக் காக்கும் பொருட்டு, தன்னாட்சி அதிகாரம் வழங்க வகை செய்கிறது.[1][2] 22-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1969 மூலம், 244ஏ பிரிவு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. அசாம் மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு தன்னாட்சி அரசை நிறுவுவதற்கும், உள்ளூர் சட்டமன்றம் அல்லது அமைச்சரவை அல்லது இரண்டையும் உருவாக்க ஆறாவது அட்டவணை இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க, தன்னாட்சி மாவட்டக் குழுக்களை (Administrative District Council) (ஏடிசி) நிறுவுவதற்கு ஏற்ற சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை இது மாநிலங்களுக்கு வழங்குகிறது. இந்த மாவட்டக் குழுக்குளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க, அந்தந்த மாநில அரசுகளின் சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[3] ஆறாவது அட்டவணையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட தன்னாட்சி குழுக்கள்![]() இந்திய அரசியலமைப்ப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், கீழ்கண்ட 4 மாநிலங்களில் தன்னாட்சிப் பிரதேச நிர்வாகப்பகுதிகள் மற்றும் தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது. அவைகள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia