முதல் தேர்வுப் போட்டிக்கு முன்பு, இங்கிலாந்து அணியின் பல்வேறு வீரர்களுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.[5] இதன் விளைவாக டொமினிக் பெஸ் மற்றும் கிரைட் ஓவர்டன் ஆகிய வீரர்கள் இங்கிலாந்து அணியில் முன்னேற்பாடாக சேர்க்கப்பட்டனர்.[6] முதல் தேர்வுப் போட்டியின் போது விரல் முறிவு காரணமாக எய்டென் மார்க்ரம் தென்னாப்பிரிக்க அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக கீகன் பீட்டர்சென் சேர்க்கப்பட்டார்.[7][8] 2வது தேர்வுப் போட்டிக்கு முன்பு காயம் காரணமாக ரோரி பர்ன்ஸ் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார்.[9] ஜனவரி 2020இல் காயம் காரணமாக பாட் பிரவுன் இங்கிலாந்து ஒநாப மற்றும் இ20ப ஆகிய அணிகளில் இருந்து நீக்கப்பட்டார்.[10]
248 (137.4 நிறைவுகள்) பீட்டர் மலான் 84 (288) பென் ஸ்டோக்ஸ் 3/35 (23.4 நிறைவுகள்)
இங்கிலாந்து 189 ஓட்டங்களால் வெற்றி நியூலேண்ட்ஸ் துடுப்பாட்டத் திடல், கேப் டவுன் நடுவர்கள்: குமார் தர்மசேன (இல.), பவுல் ரெய்ஃப்பெல் (ஆசி.) ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (இங்.)
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
பீட்டர் மலான் (தெஆ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
ஜேம்ஸ் அண்டர்சன் தனது 28வது ஐவீழ்த்தலை எடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக தேர்வுப் போட்டிகளில் அதிக முறை ஐவீழ்த்தல் எடுத்தவரானார்.[12]
டொம் சிப்லி (இங்.) தனது முதல் தேர்வு நூறை எடுத்தார்.[13]
இது 1957க்குப் பிறகு இந்த நிகழ்விடத்தில் நடந்த தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றியாகும்..[14]
உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0.
இங்கிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றி சென்ட் ஜார்ஜ்ஸ் பூங்கா, போர்ட் எலிசபெத் நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), ரொட் டக்கர் (ஆசி.) ஆட்ட நாயகன்: ஒல்லி போப் (இங்.)
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
டேன் பட்டர்சன் (தெஆ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
இது இங்கிலாந்து அணி வெளிநாட்டில் விளையாடும் 500வது தேர்வுப் போட்டியாகும்.[15]
பென் ஸ்டோக்ஸ் (இங்.) தேர்வுப் போட்டிகளில் தனது 4,000வது ஓட்டத்தை எடுத்தார்.[16]
ஒல்லி போப் (இங்.) தனது முதல் தேர்வு நூறைப் பெற்றார்.[17]
டொமினிக் பெஸ் (இங்,) தேர்வுப் போட்டிகளில் தனது முதல் ஐவீழ்த்தலை எடுத்தார்.[18]
உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0.