இந்தியாவில் பெண்கள் நிலை கடந்த சில ஆயிர ஆண்டுகளில் வெகுவாக மாற்றம் அடைந்துள்ளது.[3][3] பண்டைக் காலத்தில் பெண்கள் ஆண்களுடன் சமநிலையில் இருந்தனர்;[4] இடைக்காலங்களில் மிகவும் தாழ்ந்த நிலையை எய்தினர்;[5]சம உரிமைகளுக்கு அண்மை நூற்றாண்டில் பல சீர்திருத்தவாதிகள் போராடி வந்துள்ளனர். தற்கால இந்தியாவில் பல உயர்ந்த பதவிகளில் பெண்கள் இருந்துள்ளனர்; இந்திய அரசில் குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளனர்.
1936-இல் சரளா தாக்ரல் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆனார்
1848: சாவித்திரி பாய் புலேவும் அவரது கணவர் ஜோதிராவ் புலேவும் புனேவில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர். சாவித்திரிபாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆனார்.
1936: சரளா தாக்ரல் வானூர்தியை ஓட்டிய முதல் பெண் ஆனார்.[10][11][12]
1944: அசிமா சாட்டர்ஜி இந்தியப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் ஆனார்.
1947: 15 ஆகஸ்ட் 1947-இல், சுதந்திரத்தைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சமஸ்தானத்தின் ஆளுநரானதன் மூலம் சரோஜினி நாயுடு, நடைமுறையில் இந்தியாவின் முதல் ஆளுநரானார். அதே நாளில், அம்ரித் கெளர்முதல் அமைச்சரவையில் நாட்டின் முதல் பெண் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார்.
சுதந்திரத்திற்குப் பின்: ருக்மணி தேவி அருண்டேல் இந்திய வரலாற்றில் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். கோயில் நடனக் கலைஞர்களான தேவதாசிகளிடையே நிலவும் அசல் 'சதிர்' பாணியில் இருந்து இந்திய பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டியத்தில் அவர் மிக முக்கியமான மறுமலர்ச்சியாளராகக் கருதப்படுகிறார். பாரம்பரிய இந்திய கலைகள் மற்றும் கைவினைகளை மீண்டும் நிலைநிறுத்தவும் அவர் பணியாற்றினார்.
1951: தெக்கான் ஏர்வேசின் பிரேம் மாத்துர் முதல் வணிகமுறை இந்திய வானோடி ஆனார்.
இந்திரா காந்தி 1966-இல் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆனார்.
1979: அன்னை தெரசா நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியானார்.
1984: மே 23-ஆம் நாள் பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.
1986: சுரோகா யாதவ் தொடர்வண்டி ஓட்டுனரான முதல் ஆசியப் பெண் ஆனார்.
1989: பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.[13]
1991: மும்தாஜ் காசி டீசல் தொடருந்தை ஓட்டிய முதல் ஆசியப் பெண் ஆனார்.[15]
1992:பிரியா ஜிங்கன் இந்திய இராணுவத்தில் சேர்ந்த முதல் பெண் கேடட் ஆனார் (பின்னர் 6 மார்ச் 1993 இல் நியமிக்கப்பட்டார்)[16]
1999: அக்டோபர் 31-இல் சோனியா காந்தி இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி, கர்ணம் மல்லேஸ்வரி ஆவார், இவர் சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்கும் (weightlifting) போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2007: சூலை 25-ஆம் நாள் பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆனார்.
2009: சூன் 4-ஆம் நாள் மீரா குமார் நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆனார்.
2011: அக்டோபர் 20 அன்று, பிரியங்கா என் (Priyanka.N)., நம்ம மெட்ரோவின்(Namma metro)தொடக்க ரயிலை ஓட்டி, முதல் பெண் இந்திய மெட்ரோ ஓட்டுநர்(pilot)ஆனார்..[17]
2014: மோடி அமைச்சகத்தில் 7 பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 6 பேர் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர், இது வரலாற்றில் எந்த இந்திய அரசாங்கத்திலும் அதிக எண்ணிக்கையிலான பெண் கேபினட் அமைச்சர்கள். பாதுகாப்பு மற்றும் வெளியுறவு போன்ற மதிப்புமிக்க அமைச்சகங்கள் பெண் அமைச்சர்களால் நடத்தப்படுகின்றன Indian government .[18]
2017: On 25 March, Tanushree Pareek became the first female combat officer commissioned by the Border Security Force.
2018: In February, 24 year old Flying Officer Avani Chaturvedi of the Indian Air Force became the first Indian female fighter pilot to fly solo. She flew a MiG-21 Bison, a jet aircraft with the highest recorded landing and take-off speed in the world.[19]