எதிர்க்கட்சித் தலைவர் (இந்தியா)
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அலுவல்முறையாக அறிவிக்கப்படும் அரசியல்வாதி ஆவார். இந்தப் பதவி முந்தைய நடுவண் சட்டமன்றத்திலும் இருந்தாலும் 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்குப் பிறகே அரசியலமைப்பு அங்கீகரித்த பதவியாக மாறியது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊதியம் மற்றும் படிகள் சட்டம் 1977 என்றறியப்படும் இந்தச் சட்டத்தின்படி மக்களவை அல்லது மாநிலங்களவையில் மிகவும் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவராக முறையே மக்களவைத் தலைவர் அல்லது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் அறிவிக்கப்படுகிறார்.[1][2] இருப்பினும், முறையான அங்கீகாரம் பெற, குறிப்பிட்ட கட்சி குறைந்தது மொத்த உறுப்பினர்களில் 10% ஆவது பெற்றிருக்க வேண்டும் (மக்களவையில் 54 உறுப்பினர்கள்). இதற்கு கீழாக இருந்தால் அவையில் அங்கீகரிகப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படுவதில்லை.[1][3] இப்பதவிக்கான உரிமை ஒரு கட்சிக்கே உள்ளது; கட்சிகளின் கூட்டணிகளுக்கல்ல. எனவே தனிக்கட்சி ஒன்று 10% உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும்.[4] ஆய அமைச்சருக்கான தகுதியை மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களும் பெறுகின்றனர். முறையான எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படாதவிடத்து எதிரணியில் உள்ள மிகப் பெரிய கட்சியின் தலைவர் எதிர்கட்சித் தலைவரின் பணிகளை மேற்கொள்வார். இருப்பினும் பெரிய கட்சியின் தலைவருக்கு அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவருக்கான ஊதியமும் படிகளும் வழங்கப்படுவதில்லை.[5] இப்பதவியை அறிவிப்பதற்கான இந்த விதிகள் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது மரபுசார்ந்த ஒன்றாகும். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் ஊதியமும் படிகளும் சட்டம், 1977இல் பெரும்பான்மையை நிர்ணயிக்கும் அதிகாரம் குறிப்பிட்ட அவைகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பல முக்கியத்துவம் பெற்ற குழுக்களில் தமது பதவியின் காரணமாக இடம் பெறுகிறார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம், நடுவண் புலனாய்வுச் செயலகம் ஆகியவற்றின் இயக்குநர்களையும் லோக்பால், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களையும் முதன்மைத் தகவல் ஆணையர்களையும் தேர்வு செய்யும் குழுக்களில் அங்கம் வகிக்கிறார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம் சட்டம், 2003, பிரிவு 4, வெளிப்படையாக அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதவிடத்து மக்களவைவில் பெரிய எதிர்க்கட்சியின் தலைவரை தேர்வுக் குழுவில் சேர்த்துக் கொள்ள வழி வகுத்துள்ளது.[6] 2014-இல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சைகள்1977ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் குறைந்தது 10% மற்றும் அதற்கு மேலும் உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க மக்களவைத் தலைவரால் இயலும். ஆனால் 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி உட்பட எந்த எதிர்க்கட்சியும் குறைந்த பட்சம் 10 விழுக்காடு உறுப்பினர்களை மக்களவையில் கொண்டிருக்கவில்லை. எதிர்க்கட்சிகளில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மட்டும் அதிகமாக பட்சமாக 44 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருப்பதால், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவி கோருவதை, மக்களவைத் தலைவரால் ஏற்க இயலாமல் உள்ளது. இதனால் தற்போது இந்த விவகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.[7][8] மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள்
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல்மாநிலங்களவையில் 1969 வரை எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவரும் அறியப்படவில்லை. அதுவரை எதிரணியில் மிகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர், எந்தவொரு அங்கீகாரமோ, தகுதியோ, உரிமைகளோ இன்றி, எதிர்க்கட்சித் தலைவர் என அழைக்கப்பட்டனர். 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு பின்னரே இந்தப் பதவி முறையாக வரையறுக்கப்பட்டது. இதன்படி எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்: (i) அவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் (ii) மாநிலங்களவையில் மிகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அரசுக்கு எதிரான கட்சியின் தலைவராக இருத்தல் வேண்டும். (iii) மாநிலங்களையின் அவைத்தலைவரால் (இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்) ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களையில் எதிர்க்கட்சித் தலைவர்களாக பொறுப்பேற்றவர்களின் பட்டியல்:[13]
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia