ஒரு குறிப்பிட்ட இடத்தையோ தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு(GI), அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளைக் குறிப்பிட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.[1]
உலக வணிக அமைப்பின் உறுப்புநாடான இந்தியாவில், புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) 1999-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003-இல் நடைமுறைக்கு வந்தது.[2][3] இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவுக்கும் பாதுகாப்புக்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.[4]
இந்தியாவின் புவிசார் குறியீடு பொருட்கள்
இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[5] பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவிலும் பிரபலமாகத் திகழ்கின்றன.[6] 195 இந்திய பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 57 பொருட்கள் விவசாயம், உணவு சார்ந்தவை ஆகும்.
புவிசார்குறியீடு பெற்ற தமிழக பொருட்கள்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகை பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய், புளியங்குடி எலுமிச்சை பழம்,பண்ருட்டி பலாஉள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. அவை கீழே அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.(இப்பட்டியல் முழுமையானதன்று விடுபட்ட பொருட்களை பட்டியலில் இணைத்து பட்டியலை மேம்படுத்தலாம்)[7]
வெளி இணைப்புகள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
வ.எண் |
ஊர் பெயர் |
மாவட்டம் |
சிறப்பு |
புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள விபரம்[8]
|
1 |
பண்ருட்டி |
கடலூர் மாவட்டம் |
பலாப்பழம் |
ஆம்
|
2 |
சேலம் |
சேலம் மாவட்டம் |
மாம்பழம், வெண்பட்டு |
ஆம்
|
3 |
தம்மம்பட்டி |
சேலம் மாவட்டம் |
மர சிற்பங்கள் |
ஆம்
|
4 |
மதுரை |
மதுரை மாவட்டம் |
மல்லிகை பூ, சுங்குடி சேலை |
ஆம்
|
5 |
திருவண்ணாமலை |
திருவண்ணாமலை மாவட்டம் |
சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம், ஆரணி பட்டு |
ஆம்
|
6 |
பழனி |
திண்டுக்கல் மாவட்டம் |
பஞ்சாமிர்தம் |
ஆம்
|
7 |
தூத்துக்குடி |
தூத்துக்குடி மாவட்டம் |
மக்ரூன், உப்பு |
ஆம்
|
8 |
கோவில்பட்டி |
தூத்துக்குடி மாவட்டம் |
கடலை மிட்டாய் |
ஆம்[9]
|
9 |
திருநெல்வேலி |
திருநெல்வேலி மாவட்டம் |
அல்வா , பத்தமடை பாய் |
ஆம்
|
10 |
ஸ்ரீவில்லிப்புத்தூர் |
விருதுநகர் மாவட்டம் |
பால்கோவா |
ஆம்
|
11 |
காரைக்குடி |
சிவகங்கை மாவட்டம் |
கண்டாங்கி சேலை, கொட்டான், காரைவீடு, ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள் |
ஆம் [10]
|
12 |
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் மாவட்டம் |
தஞ்சாவூர் வீணை, தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு,நெட்டி மாலை |
ஆம் ( ஐந்தும் )
|
13 |
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் மாவட்டம் |
பட்டு புடவை |
ஆம்
|
14 |
திண்டுக்கல் |
திண்டுக்கல் மாவட்டம் |
பூட்டு |
ஆம்[11]
|
15 |
ஆம்பூர் |
திருப்பத்தூர் மாவட்டம் |
பிரியாணி |
ஆம்
|
16 |
சிவகாசி |
விருதுநகர் மாவட்டம் |
பட்டாசு, நாட்காட்டி |
ஆம்
|
17 |
திருப்பூர் |
திருப்பூர் மாவட்டம் |
உள்ளாடை |
ஆம்
|
18 |
கும்பகோணம் |
தஞ்சாவூர் மாவட்டம் |
பாக்குச் சீவல், காஃபி, வெற்றிலை |
ஆம்
|
19 |
நாகர்கோவில் |
கன்னியாகுமரி மாவட்டம் |
மட்டி வாழை, நேந்திரம் வாழை, வத்தல், நாட்டு மருந்து,கிராம்பு,கோயில் நகைகள், மயிலாடி கற்சிற்பம், ஈத்தாமொழி நெட்டை தென்னை தேங்காய் |
ஆம்
|
20 |
மார்த்தாண்டம் |
கன்னியாகுமரி மாவட்டம் |
தேன் |
ஆம்
|
21 |
தேனி |
தேனி மாவட்டம் |
கரும்பு |
ஆம்
|
22 |
ஊத்துக்குளி |
திருப்பூர் மாவட்டம் |
வெண்ணெய் |
ஆம்
|
23 |
பத்தமடை |
திருநெல்வேலி மாவட்டம் |
பத்தமடை பாய் |
ஆம்[12]
|
24 |
திருச்செந்தூர் |
தூத்துக்குடி மாவட்டம் |
கருப்பட்டி |
ஆம்
|
25 |
வாணியம்பாடி |
திருப்பத்தூர் மாவட்டம் |
பிரியாணி |
ஆம்
|
26 |
பவானி |
ஈரோடு மாவட்டம் |
ஜமக்காளம் |
ஆம்
|
27 |
ஆரணி |
திருவண்ணாமலை மாவட்டம் |
பட்டு |
ஆம்
|
28 |
சிறுமலை |
திண்டுக்கல் மாவட்டம் |
மலை வாழை |
ஆம்
|
29 |
நாச்சியார்கோயில் |
தஞ்சாவூர் மாவட்டம் |
நாச்சியார்கோயில் குத்துவிளக்கு |
ஆம்[13]
|
30 |
திருப்பாச்சேத்தி |
சிவகங்கை மாவட்டம் |
அரிவாள் |
ஆம்
|
31 |
விருதுநகர் |
விருதுநகர் மாவட்டம் |
புரோட்டா |
ஆம்
|
32 |
சின்னாளப்பட்டி |
திண்டுக்கல் மாவட்டம் |
சின்னாளப்பட்டி சுங்குடி சேலை |
ஆம்
|
33 |
உடன்குடி |
தூத்துக்குடி மாவட்டம் |
கருப்பட்டி |
ஆம்
|
34 |
மணப்பாறை |
திருச்சி மாவட்டம் |
முறுக்கு, உழவு மாடு |
ஆம்
|
35 |
அலங்காநல்லூர் |
மதுரை மாவட்டம் |
ஜல்லிக்கட்டு |
ஆம்
|
36 |
பாலமேடு |
மதுரை மாவட்டம் |
ஜல்லிக்கட்டு |
ஆம்
|
37 |
சோழவந்தான் |
மதுரை மாவட்டம் |
வெற்றிலை |
ஆம்
|
38 |
அரும்பாவூர் |
பெரம்பலூர் மாவட்டம் |
மரசிற்பம் |
ஆம்
|
39 |
பொள்ளாச்சி |
கோவை மாவட்டம் |
இளநீர் |
ஆம்
|
40 |
ஈரோடு |
ஈரோடு மாவட்டம் |
மஞ்சள், ஜவுளிகள் |
ஆம்[14]
|
41 |
சுவாமிமலை |
தஞ்சாவூர் மாவட்டம் |
வெண்கலச் சிலை வார்ப்பு |
ஆம்
|
42 |
பெருந்துறை |
ஈரோடு மாவட்டம் |
வேல் (ஆயுதம்) |
ஆம்
|
43 |
இராமநாதபுரம் |
இராமநாதபுரம் மாவட்டம் |
குண்டு மிளகாய் |
ஆம்[15]
|
44
|
மானாமதுரை
|
சிவகங்கை மாவட்டம்
|
மட்பாண்டம்
|
ஆம்
|
45
|
இலவம்பாடி
|
வேலூர் மாவட்டம்
|
முள் கத்திரிக்காய்
|
ஆம்
|
46
|
புளியங்குடி (லெமன் சிட்டி)
|
தென்காசி மாவட்டம்
|
எலுமிச்சை பழம்
|
ஆம்
|