இரண்டாம் பானிபட் போர்

இரண்டாம் பானிபட் போர்

பானிபட் போர்க்களக் காட்சியின் உலோக ஓவியம்
நாள் 5 நவம்பர் 1556
இடம் பானிபட், அரியானா
29°23′N 76°58′E / 29.39°N 76.97°E / 29.39; 76.97
மொகலாயர் வெற்றி அடைதல்
பிரிவினர்
மொகலாயப் பேரரசு ஹெமு பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
பைராம் கான்
ஷா அலி குயிலி கான்
படாக்ஷனின் லால் கான்
முகமது காசிம்
Abdulla Khan
இஸ்கந்தர் கான்
சிக்கந்தர் கான் உஸ்பெக்
முல்லா பீர் முகமது
ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன்  
பலம்
தரைப்படைகள் 10,000-20,000[1]
ஹெமுவை விட அதிக பீரங்கிப் படைகள்[2]
தரைப்படைகள் 30,000 [3]
1000 போர் யாணைகள்
51 பீரங்கிகள்[4]
இழப்புகள்
120 போர் யாணைகள் கைப்பற்றப்பட்டது.

இரண்டாம் பானிபட் போர் (Second Battle of Panipat) வட இந்தியாவை ஆண்ட தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் போர்ப்படைகளுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது[5] போரில் அக்பர் வென்றார்.[6]

பின்னணி

வட இந்தியப் பேரரசர் ஹெமு

24 சனவரி 1556இல் மொகலாய அரசர் உமாயூன் இறந்த போது, அவரின் மகன் அக்பருக்கு வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 14 பிப்ரவரி 1556இல் அக்பர் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் பஞ்சாபில் காலநௌர் பகுதியில் இருந்தார்.

ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார்.

போர்

பானிபட் என்ற இடத்தில் 5 நவம்பர் 1556 அன்று மொகலாயரின் 10,000 தரைப்படைகள்,[7][8] ஹெமுவின் 30,000 தரைப்படையினருடன் போரிட்டது. ஹெமுவின் யானைப் படைகள் மொகலாயர் படைகளைத் தாக்கியது. ஒரு மொகலாய வீரனின் வில்லில் புறப்பட்ட அம்பு ஹெமுவின் ஒரு கண்னைத் தாக்கியதால் சுய நினைவை இழந்தார்.[9][10] சுய நினைவை இழந்த ஹெமுவைப் பிடித்து அக்பரின் கூடாரத்திற்கு கொண்டு சென்றனர். பைராம் கான் ஹெமுவின் தலையைத் துண்டித்தார்.

போருக்குப் பின்

ஹெமுவின் 120 போர் யானைகளை அக்பரின் படை கைப்பற்றியது. அக்பர் ஆக்ராவையும் தில்லியையும் அதிக எதிர்ப்பின்றி கைப்பற்றி, தில்லி அரியணையில் அமர்ந்தார். மீண்டும் மொகலாயர் பேரரசு தில்லியை ஆளத் துவங்கியது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Conflict and Conquest in the Islamic World: A Historical Encyclopedia [2 ... Retrieved 11 December 2014.
  2. At Panipat, Babur won, Akbar got lucky, Bhau got it wrong; January 15, 2015, 7:40; Manimugdha S Sharma
  3. Philosophers of War: The Evolution of History's Greatest Military Thinkers ... Retrieved 11 December 2014.
  4. India's Historic Battles. Retrieved 11 December 2014.
  5. Singh, Jagjit (Maj. General.) (2006). Artillery: The Battle-winning Arm. Lancer Publishers. pp. 19–. ISBN 978-81-7602-180-7. Retrieved 11 July 2012.
  6. S. Chand. History of Medieval India. ISBN 81-219-0364-5.
  7. Advanced Study in the History of Modern India 1707-1813. Retrieved 11 December 2014.
  8. India's Historic Battles. Retrieved 11 December 2014.
  9. Himu, the Hindu "Hero" of Medieval India. Retrieved 11 December 2014.
  10. Everyone's History. Retrieved 11 December 2014.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya