செஞ்சி முற்றுகை
செஞ்சி முற்றுகை (Siege of Jinji), (செப்டம்பர், 1690 – 8 சனவரி 1698), முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் சுல்பிகர் அலி கான் தலைமையில், ஆற்காடு நவாப் மற்றும் மதுரையின் ராணி மங்கம்மாள் ஆகியோர் இணைந்து, செஞ்சிக் கோட்டையில் தங்கியிருந்த சத்திரபதி இராஜாராம் மற்றும் தாராபாய் உள்ளிட்ட மராத்தியப் படைகளை விரட்டியடிக்க செப்டம்பர், 1690ல் முற்றுகையிட்டனர்.[2] பின்னணிவிஜய நகரப் பேரரசின் ஆளுநர்களாக இருந்த செஞ்சி நாயக்கர்கள், தமிழ்நாட்டின் செஞ்சி நகரத்தில் செஞ்சிக் கோட்டை கட்டிக் கொண்டு கி பி 1509 முதல் 1649 முடிய ஆட்சி செய்தனர். செஞ்சிக் கோட்டையை, 1649ல் பிஜப்பூர் சுல்தான் அடில் ஷா கைப்பற்றினர். 1677ல் பேரரசர் சிவாஜி, பிஜப்பூர் சுல்தானிடமிருந்து செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றி மராத்தியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். முற்றுகையின் முடிவில்செப்டம்பர், 1690ல் துவங்கிய செஞ்சிக் கோட்டையின் முற்றுகைப் போர், மராத்தியப் பேரரசர் சத்திரபதி இராஜாராம், தாராபாய் உள்ளிட்ட மராத்திய அரச குடும்பத்தினர் செஞ்சிக்கோட்டையை விட்டு 8 சனவரி 1698ல் இரகசியமாக மராத்தியப் பேரரசின் பகுதியில் வெளியேறினார்.[3] எனவே செஞ்சிக் கோட்டை முகலாயப் படைகளிடம் வீழ்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் ஆற்காடு நவாப்கள் ஆட்சியும், மைசூரில் ஐதர் அலி போன்ற சுல்தான்களின் ஆட்சியும் தொடங்கியது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia