இராஜசிங்கமங்கலம் வட்டம்இராஜசிங்கமங்கலம் வட்டம், அல்லது ஆர். எஸ். மங்கலம் வட்டம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என கூறப்படும் சிறப்பும் ஆர். எஸ். மங்கலம் தாலுகாவிற்கு உண்டு. தோற்றம்திருவாடானை வட்டம் மற்றும் பரமக்குடி வட்டங்களை சீரமைத்து, இராஜசிங்கமங்கலத்தைத் நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, இராஜசிங்கமங்கலம் வருவாய் வட்டத்தை தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[2] உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்இராஜசிங்கமங்கலம் வட்டம் ஆனந்தூர், சோழந்தூர், மற்றும் இராஜசிங்கமங்கலம் என மூன்று உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் கொண்டது. இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் இருக்கும் மொத்த ஊர்கள்ஆனந்தூர் உள்வட்டம்
இராஜசிங்கமங்கலம் உள்வட்டம்
சோழந்தூர் உள்வட்டம்
</ref> மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia