அபிராமம் (ஆங்கிலம்:Abiramam), இந்தியாவின்தமிழ்நாடுமாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். பரமக்குடி - கமுதி சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது.
முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில் (ரங்கூன்) தொழில் செய்து வந்தனர். இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 மக்கள்தொகையும் கொண்டது.[4]