இராதா குமுத் முகர்ஜி
இராதா குமுத் முகர்ஜி (Radha Kumud Mukherjee) (மேலும் இராதாகுமுத் அல்லது ராதா குமுத் மூகர்ஜி அறியப்படும் (25 ஜனவரி 1884 - 9 செப்டம்பர் 1963) இவர் ஓர் இந்திய வரலாற்றாசிரியரும், பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சியில் குறிப்பிடத்தக்க இந்திய தேசியவாதியுமாவார். இவர் சமூகவியலாளர் இராதாகமல் முகர்ஜியின் சகோதரர் ஆவார்.[1] தொழில்முகர்ஜி, 1905இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், வங்காள தேசியக் கல்லூரியின் புதிதாக நிறுவப்பட்ட தேசிய கல்வி கழகத்தில் சேர்ந்தார். 1915க்குப் பிறகு, பனாரசு இந்து பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், இலக்னோ பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியான பதவிகளைத் வகித்தார். இலக்கியம்இவர், இந்தியன் ஷிப்பிங்: எ ஹிஸ்டரி ஆஃப் சீபோர்ன் டிரேட் அண்ட் மரைடைம் ஆக்டிவிட்டி ஆஃப் தி இந்தியன்ஸ் 1912 இல் எர்லிஸ்ட் டைம்ஸ் என்ற நூலை வெளியிட்டார். இவர், தென்கிழக்காசியாவிலுள்ள பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களை உள்ளடக்கிய ஒரு பகுதிகளைக் கொண்ட 'அகண்ட பாரதம்' என்ற கருத்தை ஆதரிப்பவராக இருந்தார்.[2] விருதுபொது விவகாரங்களில் பங்களித்ததற்காக இவருக்கு 1957இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia