இரிடியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Iridium acetylacetonate) என்பது Ir(O2C5H7)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல்சேர்மமாகும். சில சமயங்களில் இதை Ir(acac)3 என்ற சுருக்க வாய்ப்பாட்டாலும் எழுதுவர். இரிடியத்தின் ஒருங்கிணைப்பு அணைவுச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் மூலக்கூறு D3 என்ற சமச்சீரில் காணப்படுகிறது. மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இரிடியம் அசிட்டைலசிட்டோனேட்டு கனிமக் கரைப்பான்களில் நன்கு கரையும்.
தயாரிப்பு
இரிடியம் முக்குளோரைடு முந்நீரேற்றுடன் அசிட்டைலசிட்டோனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இரிடியம் அசிட்டைலசிட்டோனேட்டு உருவாகும்.[2] டைபென்சாயில் டார்டாரிக் அமிலத்துடன் இதன் கூட்டுசேர்க்கைப் பொருட்களைப் பிரிப்பதன் மூலம் அணைவுச் சேர்மத்தை தனித்தனியான ஆடியெதிர் உருவங்களாகப் பிரிக்கலாம். இச்சேர்மத்தின் இரண்டாவது இணைப்பு சமப்பகுதியங்களும் அறியப்படுகின்றன. இரண்டாவது சமபகுதியத்தில் அசிட்டைலசிட்டோனேட்டுஈந்தணைவிகளில் ஒன்று கார்பன் மூலம் இரிடியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.[3]
கார்பன் பிணைப்பு இரிடியம் அசிட்டைலசிட்டோனேட்டின் கட்டமைப்பு
பயன்கள்
O6-பிணைக்கப்பட்ட சமபகுதியம் இரசாயன நீராவி படிவுப் பயன்பாட்டிற்காக ஆராயப்பட்டது. கரிம ஒளியுமிழும் டையோடுகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு பாசுபரசுநின்றொளிர்வு உமிழ்ப்பான் கலவைகளைப் படியவைப்பது ஓர் எடுத்துக்காட்டாகும்.[4][5]
C-பிணைப்பு சமபகுதியமானது C-H செயல்படுத்தும் வினைகளுக்கு ஒரு வினையூக்கியாகவும் ஆராயப்பட்டது.
↑James E. Collins, Michael P. Castellani, Arnold L. Rheingold, Edward J. Miller, William E. Geiger, Anne L. Rieger, Philip H. Rieger "Synthesis, Characterization, and Molecular Structure of Bis(tetraphenylcyclopentdienyl)rhodium(II)" Organometallics 1995, pp 1232–1238. எஆசு:10.1021/om00003a025
↑Drake, A. F.; Gould, J. M.; Mason, S. F.; Rosini, C.; Woodley, F. J. (1983). "The optical resolution of tris(pentane-2,4-dionato)metal(III) complexes". Polyhedron2 (6): 537–538. doi:10.1016/S0277-5387(00)87108-9.