இரிடியம் மூவைதரைடு
இரிடியம் மூவைதரைடு (Iridium trihydride) என்பது IrH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உயர் அழுத்தத்தில் இரிடியமும் ஐதரசனும் வினைபுரிந்து இச்சேர்மம் உருவாகிறது. இரிடியம் மூவைதரைடின் படிக வடிவம் உருக்குலைந்த எளிய கனசதுர வடிவத்தில் உள்ளது. படிக கனசதுரத்தின் முகங்களின் மையத்தில் ஐதரசன் அணுக்கள் உள்ளன. இரிடியம் அணு கனசதுரத்தின் மையத்தில் உள்ளது. 55 கிகா பாசுக்கல் அழுத்தத்திற்கு மேலான அழுத்தத்தில் இது உருவாகிறது.[1] இரிடியம் மூவைதரைடின் பருமக் குணகம் 190 கிகா பாசுக்கல் ஆகும். இது இரிடியத்தின் பருமக் குணகத்தைக் காட்டிலும் குறைவாகும். இரிடியத்தின் பருமக் குணகம் 383 கிகா பாசுக்கல் ஆகும். அழுத்தம் 6 கிகா பாசுக்கல் அளவுக்கு குறைக்கப்படும் போது இரிடியம் மூவைதரைடின் சிதைவு மெதுவாக இருக்கும், மேலும் வளிமண்டல அழுத்தங்களில் அது சிற்றுறுதி நிலைத்தன்மையோடு இருக்கும். அழுத்தம் 14 கிகா பாசுக்கல் அளவுக்கு மேல் இருந்தால் இரிடியம் மூவைதரைடு நிலைப்புத் தன்மை கொண்டிருக்கும்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia