இரிடியம் எக்சாபுளோரைடு
இரிடியம் எக்சாபுளோரைடு (Iridium hexafluoride) என்பது IrF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியமும் புளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை இரிடியம்(VI) புளோரைடு என்ற பெயராலும் அழைப்பார்கள். அறியப்பட்டுள்ள பதினேழு இரும எக்சாபுளோரைடுகளில் இதுவும் ஒரு இரும எக்சாபுளோரைடு ஆகும். +6. என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இரிடியம் காணப்படும் ஒரே சேர்மம் இரிடியம் எக்சாபுளோரைடு ஆகும். தயாரிப்புஇரிடியம் உலோகத்துடன் அதிக அளவு தனிமநிலை புளோரினுடன் சேர்த்து 300 ° செல்சியசு வெப்பநிலையில் நேரடியாக வினைபுரியச் செய்து இரிடியம் எக்சாபுளோரைடு தயாரிக்கிறார்கள். எனினு இரிடியம் எக்சாபுளோரைடு வெப்பச்சிதைவு அடையும் என்பதால் பிரிகையடைதலைத் தவிர்க்க வாயுக்கலவையிலிருந்து உறையவைத்து பிரிக்கவேண்டும். Ir + 3 F2 → IrF6 பண்புகள்மஞ்சள் நிற படிகத் திண்மமாகக் காணப்படும் இரிடியம் எக்சாபுளோரைடின் உருகுநிலை 44 °செல்சியசு வெப்பநிலை, மற்றும் கொதிநிலை 53.6 ° செல்சியசு வெப்பநிலை என மதிப்பிடப்பட்டுள்ளது. - 140 ° செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மத்தின் திண்மக் கட்டமைப்பு செஞ்சாய்சதுரம் மற்றும் இடக்குழு Pnma என்றும் கூறப்படுகிறது. மேலும் a = 9.411 Å, b = 8.547 Å, மற்றும் c = 4.952 Å என்பன அணிக்கோவை அளபுருக்கள் ஆகும். ஒவ்வோர் அலகு செல்லுக்கும் நான்கு வெவ்வேறான வாய்ப்பாட்டு அலகுகள் வீதம் அமைந்து 5.11 கி•செ.மீ3 என்ற அடர்த்தியை சேர்மத்திற்குக் கொடுக்கிறது. இரிடியம் எக்சாபுளோரைடு (Oh) இடக்குழுவுடன் எண்முக மூலக்கூற்று வடிவியல் அமைப்பில் அமைந்துள்ளது. Ir–F பிணைப்பின் நீளம் 1.833 Å. ஆகவும் உள்ளது. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia