இரிடியம்(IV) புளோரைடு
இரிடியம்(IV) புளோரைடு (Iridium(IV) fluoride) என்பது IrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அடர் பழுப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது [1]. 1965 ஆம் ஆண்டுக்கு முன் இரிடியம்(IV) புளோரைடு தொடர்புடைய விளக்கங்கள் IrF5 சேர்மத்தைக் குறித்து விளக்குவது போலவே தோன்றுகின்றன [1]. கருப்பு இரிடியத்தை [1], IrF5 உடன் சேர்த்து அல்லது நீர்த்த ஐதரசன் புளோரைடிலுள்ள ஐதரசன் வாயுவுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி [2] இரிடியம்(IV) புளோரைடு திண்மத்தைத் தயாரிக்கிறார்கள். முப்பரிமான அணிக்கோவை படிகக் கட்டமைப்பில் உள்ள ஒரு உலோகடெட்ராபுளோரைடுக்கு இதுவே முதலாவது உதாரணமாகும். இதே கட்டமைப்பில் உள்ள டெட்ராபுளோரைடுகளாக RhF4, PdF4 மற்றும் PtF4 போன்ற சேர்மங்கள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன [3]. எண்முக வடிவில் ஆறு ஒருங்கிணைவுகள் கொண்ட இரிடியம் இக்கட்டமைப்பில் உள்ளது. எண்முக இரிடியத்தின் இரண்டு விளிம்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டும், இரண்டு புளோரின் அணுக்கள் பகிர்ந்து கொள்ளப்படாமலும் ஒன்றுடன் ஒன்றாக ஒரே பக்கத்தில் அமைந்துள்ளன [3]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia